search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தேரி குளம் நிரம்பி வருவதை காணலாம்
    X
    புத்தேரி குளம் நிரம்பி வருவதை காணலாம்

    குமரியில் கொட்டிய மழையால் 1500 பாசன குளங்கள் நிரம்பியது

    சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.82 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 16.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 36.91 அடியாகவும் உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 43.08 அடியாக இருந்தது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 433 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 64.10 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 அணையின் நீர் மட் டம் 12.77 அடியாக உள்ளது. அணைக்கு 28 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.82 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 16.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 36.91 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் உள்ள 2040 குளங்களில் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சுசீந்திரம், பூதப்பாண்டி, அருமநல்லுர், தக்கலை, தேரூர், பொற்றையடி உள்ளிட்ட பகுதிகளில் வயல் உழவு பணி நடந்து வருகிறது. ஒருசில விவசாயிகள் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள் தங்குதடையின்றி வழங்குதற்கு வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    வழக்கமாக கன்னிபூ சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் அணையை பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.



    Next Story
    ×