search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா- தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி

    தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது, தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தி, பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. மேலும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் அமைச்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான த.மனோ தங்கராஜ் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்கனவே தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டு தனிமையில் உள்ளனர். இந்தநிலையில் தற்போது 3-வது அமைச்சராக த.மனோ தங்கராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×