search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- சேலம் காந்தி மைதானம் மீண்டும் மூடல்

    கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் 2-வது தடவை முன்னெச்சரிக்கையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் இன்று காலை முதல் மூடப்பட்டது.
    சேலம்:

    நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் காந்தி விளையாட்டு மைதானம் உள் அரங்கம், இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாய் விடுதி ஆகியவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. பின்னர் கொரோனா தனிமை முகமாக மாற்றப்பட்டது.

    இதனால் காந்தி மைதானத்திற்கு நடைபயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவோர் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வந்ததும் மீண்டும் 9 மாதங்களுக்கு பிறகு சேலம் காந்தி விளையாட்டு மைதானம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் 2-வது தடவை முன்னெச்சரிக்கையாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் இன்று காலை முதல் மூடப்பட்டது. இந்த மைதானம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து இருப்பதால் அங்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இது தெரியாமல் இன்று அதிகாலை நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு வந்தனர். யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மைதானம் பூட்டப்பட்டதால் அவர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரம் மற்றும் அங்குள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டு சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டதை காண முடிந்தது.

    Next Story
    ×