search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைபள்ளி வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    X
    திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைபள்ளி வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    திருப்பூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா: ஆசிரியர்கள் அதிர்ச்சி

    திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவன் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தஞ்சையில் பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் 9 முதல் 11-ம்வகுப்பு வரையிலான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. பொதுத்தேர்வு என்பதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். விதிகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அப்பள்ளியின் பிளஸ்-2 வகுப்பில் 397 பேர் படித்து வரும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் கடந்த வியாழக்கிழமை முதல் பள்ளிக்கு வரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அந்த மாணவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அந்த மாணவன் திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். கொரோனா பாதிக்கப்பட்டதையடுத்து அந்த மாணவன் படித்த பள்ளி வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாணவனுடன் படித்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    மாணவனின் பெற்றோர் மற்றும் அவனுடன் நெருங்கிய பழகியவர்கள் ஆகியோரையும் கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவன் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×