search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு சவரன் ரூ.33 ஆயிரத்து 448-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்தபடியே இருந்து வருகிறது. சமீபத்தில் பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பின்னும் குறைந்ததால் நேற்று பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு வந்தது.

    நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.376 குறைந்து ரூ.33 ஆயிரத்து 736-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 217 ஆக இருந்தது. 11 மாதத்துக்கு பிறகு பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலையில் இன்றும் குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33 ஆயிரத்து 448-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4 ஆயிரத்து 181 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.69 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80-க்கு விற்கிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.

    அதன்பின் விலை குறைந்தபடி இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு விற்றது. தொடர்ந்து விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வந்தாலும், விலை குறைவது அதிகமாக இருந்தது. இதனால் விலை ஏறிய வேகத்திலேயே குறைந்தது.

    தங்கத்தின் மீது முதலீடுகள் குறைந்து வருகிறது. முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் அதிகளவு முதலீடுகள் செய்து வருகிறார்கள். இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 10 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1,856 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×