search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரசார் கைது

    பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

    சென்னை சைதாப்பேட்டையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 12 மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது செல்லக்குமார் எம்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், செல்லக்குமார் எம்.பி., மாநில நிர்வாகிகள் சிரஞ்சீவி, கீலனூர் ராஜேந்திரன், பொன் கிருஷ்ணமூர்த்தி, தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம்,  முனீஸ்வரர் கணேசன், இமையா கக்கன், இல.பாஸ்கரன், சுரேஷ்பாபு, அகரம்கோபி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், நாஞ்சில் பிரசாத், டில்லிபாபு, ரஞ்சன் குமார், முத்தழகன், சிவ ராஜசேகரன் மற்றும் சுமதி அன்பரசு, மைதிலி தேவி, பி.வி.தமிழ் செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மாணவர் காங்கிரஸ் யஸ்வந்த் சாகர் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.  கைது செய்யப்பட்ட அனைவரையும் வேனில் ஏற்றி கிண்டி மடுவங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
    Next Story
    ×