search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியபோது எடுத்த படம்
    X
    தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியபோது எடுத்த படம்

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவே மாட்டார் - தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி

    கடந்த 30 ஆண்டுகளாக இதையேதான் சொல்கிறார், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவே மாட்டார் என்று தர்மபுரியில் தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட அவைத்தலைவர் குமார், மாநில விஜயகாந்த் ரசிகர் மன்ற துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் மணி முனியப்பன், செல்வி, தனபால், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சியின் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசுகையில், தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வா என்று தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். உங்களின் கருத்துக்களை கேட்டு சட்டமன்ற தேர்தல் குறித்த நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து வருகிற ஜனவரி மாதம் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் தலைவர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் ஆக்குவதே தே.மு.தி.க.வின் முக்கிய நோக்கமாகும். இதற்காகத்தான் நாம் அரும்பாடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் கூட்டணி அமைத்தால் தே.மு.தி.க. இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும், என்று கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கன்னியப்பன், ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், திருநாவுக்கரசு, பழனி, இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜயசங்கர், உதயகுமார், ராமச்சந்திரன், ஜம்பேரி, முருகன், ரங்கநாதன், ராஜேந்திரன், விஜயகாந்த், சஞ்சீவன், ரகு உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறுகையில், தே.மு.தி.க. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறது. கூட்டணியில் மாற்றம் என்பது கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடிதான் முடிவு எடுக்கும். விவசாயிகளின் போராட்டத்திற்கு முதலில் ஆதரவு கொடுத்தது தே.மு.தி.க. தான். என்னை பொறுத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவே மாட்டார். அவர் இதைத்தான் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். தலைவர் விஜயகாந்த் நிச்சயம் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வருவார், என்று கூறினார்.
    Next Story
    ×