search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சென்னை பாரிமுனையில் ரூ.60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்- 2 பேர் கைது

    சென்னை பாரிமுனையில் ரூ.60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    சென்னை மண்ணடி பகுதியில் ஹவாலா பணத்துடன் 2 பேர் பதுங்கி இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடக்கு கடற்கரை போலீசார் பூக்கடை, மண்ணடி, பாரிமுனை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாரிமுனை பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த முகமது அர்சத் (வயது 47), முகமது ஜியாத் (46) என தெரியவந்தது. அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அமெரிக்க டாலர், சவுதி ரியால் என ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருந்தது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அவர்களிடம் இருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். கேரளாவிலிருந்து சென்னைக்கு ரெயிலில் வந்து மண்ணடியை சேர்ந்த விடுதி உரிமையாளர் ஒருவரிடம் கொடுக்க முயன்றதும், இருவரும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் பிடிபட்ட 2 பேரையும், பறிமுதலான ரூ.60 லட்சம் வெளிநாட்டு பணத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டது ஹவாலா பணமா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×