search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சல் பரிசோதனை முகாமை கலெக்டர் ஆய்வு
    X
    காய்ச்சல் பரிசோதனை முகாமை கலெக்டர் ஆய்வு

    34 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை- கலெக்டர் தகவல்

    தஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 34 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்த முகாம்களில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி, வடக்கு வீதியில் நடந்த முகாம்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் 9 இடங்களில் நேற்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 56 தெருக்கள் கண்டறியப்பட்டு, 104 முகாம்கள் நடத்தப்பட்டு, 4,130 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு அறிகுறிகள் உள்ளதெனவும், 23 பேருக்கு இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    கும்பகோணம் நகராட்சியில் 109 முகாம்கள் நடத்தப்பட்டு, 8,735 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 66 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 16 பேருக்கு அறிகுறிகள் இல்லையெனவும், 48 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 முகாம்கள் நடத்தப்பட்டு, 2937 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 15 பேரில் 2 பேருக்கு தொற்று இருப்பதும், 12 பேருக்கு அறிகுறிகள் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவருக்கு முடிவு வரவேண்டியுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 522 தெருக்களில், 625 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,865 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. 727 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு அறிகுறி உள்ளது. 597 பேருக்கு இல்லை., 117 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகர் நல அலுவலர்(பொ) டாக்டர் முத்துக்குமார், தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×