search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர் சாந்தா
    X
    பெரம்பலூர் கலெக்டர் சாந்தா

    கொரோனா அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்- பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    கொரோனா அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய் அறிகுறியான தொண்டையில் வலி, காய்ச்சல், சளி, மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி, தலை வலி, சுவையின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, வலிப்பு நோய், மன நோய் பாதிப்பு, கர்ப்பிணிகள் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மேலும், பொதுமக்கள் தினந்தோறும் 10 முதல் 15 முறை கை கழுவுதல் வேண்டும். வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைகள் மற்றும் தெருக்களுக்கு சென்றாலும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
    Next Story
    ×