search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் மட்டும் 996 பேர் பலி - அதிரும் தமிழகம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.
    சென்னை:
     
    தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.  

    இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த மொத்த எண்ணிக்கையில் 996 உயிரிழப்புகள் சென்னையில் ஏற்பட்டுள்ளது. 

    மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

    செங்கல்பட்டு - 106
    சென்னை - 996
    கோவை - 1
    கடலூர் - 5
    திண்டுக்கல் - 7
    ஈரோடு - 5
    கள்ளக்குறிச்சி - 3
    காஞ்சிபுரம் - 26
    கன்னியாகுமரி - 1
    கரூர் - 2
    கிருஷ்ணகிரி - 2
    மதுரை - 51
    நாமக்கல் - 1
    புதுக்கோட்டை - 4
    ராமநாதபுரம் - 17
    ராணிப்பேட்டை - 3
    சேலம் - 4 
    சிவகங்கை - 4
    தென்காசி - 1
    தஞ்சாவூர் - 2
    தேனி - 5
    திருவள்ளூர் - 82
    திருவண்ணாமலை - 12
    தூத்துக்குடி - 4
    திருநெல்வேலி - 8
    திருச்சி - 4
    வேலூர் - 4
    விழுப்புரம் - 17
    விருதுநகர் - 7
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளி நாடு - 1

    மொத்தம் - 1,385 

    Next Story
    ×