search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    75 நாட்களுக்கு பிறகு பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

    75 நாட்களுக்கு பிறகு பாம்பன் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை 80 விசைப்படகுகளில் மன்னார்வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    கொரோனா ஊரடங்கு உத்தரவு, மீன்பிடி தடை காலம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விசைப்படகுகளுக்கான 64 நாள் தடை காலத்தை 47 நாட்களாக குறைத்து கடந்த 1-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மத்திய-மாநில அரசுகள் அறிவித்தன.

    இதையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளிலும் மீனவர்கள் 1-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமேசுவரத்திற்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளதால் வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர். மேலும் இரவில் மட்டும் மீன் பிடிப்பது என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை 80 விசைப்படகுகளில் மன்னார்வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். முறையான அனுமதி பெற்று 75 நாட்களுக்கு பிறகு அவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×