search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் விநியோகம் விரைவில் தொடங்கும்- அமைச்சர் தகவல்

    ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் காமராஜ் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணலியில் கோரிக்கை மனுக்களை வாங்கிய அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டமிட்ட செயல்பாடுகளால் இந்த ஆறுதல் நமக்கு கிடைத்துள்ளது.

    கொரேனா ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு ரேசன் கடைகளில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கூடுதல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் விநியோகம் விரைவில் தொடங்கும். அதற்கான தேதியினை முதல்வர் அறிவிப்பார்.

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1600 கோடி மதிப்பில் ஆறுகள் தூர்வாரி கரைகள் பலப்படுத்துதல், மதகு மற்றும் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆறு, குளம், வாய்க்கால் உள்ளிட்ட மராமத்து பணிகள் இந்த ஆண்டு ரூ.20.23 கோடி மதிப்பிலும், ஆறு தூர்வாரும் பணிகள் ரூ.22.57 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகிறது.

    கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கும் வகையில் நன்னிலம் தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் அ.தி.மு.க சார்பில் மளிகை சாமான்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதுபோல் தொகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கும் கபசுரகுடிநீர் சூரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×