என் மலர்

  செய்திகள்

  மருத்துவமனை
  X
  மருத்துவமனை

  நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  நெல்லை:

  செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி(வயது29). இவர் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

  ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஆழ்வார்திருநகரியில் உள்ள ஒரு வீட்டில் மாயாண்டி செல்போன் திருடினார். வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாயாண்டியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்தனர். பின்பு அவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். சிறைக்கு செல்வதற்கு முன்பு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சளி மற்றும் இருமலுடன் கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. அவரை கொரோனா வார்டில் வைத்து பரிசோதனை அழைத்து சென்றனர்.

  அப்போது மாயாண்டி கொரோனா வார்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×