என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கொரோனா தொற்றில்லா மண்டலமாக மாறிய சோழிங்கநல்லூர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்றில்லா மண்டலமாக சோழிங்கநல்லூர் மாறியுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

  அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.

  வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  இந்நிலையில் 15 மண்டலங்களை கொண்ட சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்றில்லா மண்டலமாக சோழிங்கநல்லூர் மாறியுள்ளது.

  சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

  இதனால் கொரோனா தொற்றில்லா மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. 
  Next Story
  ×