search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி

    அதிமுக சார்பில் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி- அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    15 ஆயிரம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

    சிவகாசி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று விருதுநகர் மாவட்ட அ.தி.முக. சார்பில் 15ஆயிரம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் பணிகள் தொடங்கியது.

    அரிசி வழங்கும் பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யதுஜஹாங்கீர், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹீம், ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், நரிக்குடி முன்னாள் யூனியன் தலைவர் பிரபாத், சிவகாசி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சிவகாசி நகர செயலாளர் அசன் பத்ருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், வெம்பக் கோட்டை ஒன்றிய செயலாளர் ராம்ராஜ் பாண்டியன், ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லட்சுமிநாராயணன், மாவட்ட கவுன்சிலர் நர்மதா ஜெயக்குமார், வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×