search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களில் 7,163 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 7163 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

    அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் திரும்பிய 4,125 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து 28 நாட்களுக்கு தீவிரமாக கணகாணிக்கப்படுவார்கள்.

    தனிமைபடுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பிரிவுடன் இணைந்து மக்கள் நடமாட்ட முள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் இருந்து கடந்த 1-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்டத்துக்கு 3 ஆயிரத்து 372 பேர் வந்துள்ளனர். இதில் 334 பேர் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 38 பேர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

    இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×