search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்துதல்
    X
    தனிமைப்படுத்துதல்

    மதுரையில் கொரோனா பாதிப்பில் இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 4 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்

    மதுரையில் கொரோனா பாதிப்பில் இறந்த காண்டிராக்டரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 4 பேர் தனிமைபடுத்தப்பட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது காண்டிராக்டர் கொரோனா பாதிப்பால் இறந்தார். அவரது உடல் ரசாயன கலவைகளால் பதப்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலமடையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. காண்டிராக்டரின் இறுதிச்சடங்கில் 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

    இறுதிச்சடங்குகள் முடிந்ததும் அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவரவர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கொரோனா பாதிப்பால் இறந்தவர் வசித்து வந்த அண்ணாநகர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் வினய் தடை விதித்துள்ளார். மேலும் மதுரை மாவட்டத்தில் 539 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வீடுகளில் தான் இருக்கிறார்களா? என்பது குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில்2 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×