search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயில் எரியும் மக்காச்சோள பயிர்களை படத்தில் காணலாம்
    X
    தீயில் எரியும் மக்காச்சோள பயிர்களை படத்தில் காணலாம்

    கோவில்பட்டி அருகே தீ விபத்து- மக்காச்சோளம் எரிந்து நாசம்

    கோவில்பட்டி அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் எரிந்து நாசமானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி கிராமத்திற்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் இருந்து நேற்று மதியம் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அறுவடை செய்யப்படாமல் இருந்த மக்காச்சோளம், அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள தட்டைகள் மற்றும் கால்நடை தீவன நாற்றுகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இதனையடுத்து விவசாயிகள் தீயை அணைக்க முயன்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. அவை முற்றிலுமாக தீயில் எரிந்து சாம்பலாகின.

    இந்த தீ விபத்தால் காளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் 9 ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோளம் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் அருகே உள்ள 30 ஏக்கரில் மக்காச்சோள தட்டைகள் மற்றும் கால்நடை தீவன நாற்றுகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    இதே போன்று அருகிலுள்ள ஜமீன்தேவர்குளத்திலுள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறுவடை செய்து வைத்திருந்த 30 குவிண்டால் மக்காச்சோளம். 3 ஏக்கரில் இருந்த தப்புகதிர் 10 குவிண்டால் ஆகியவை தீயில் கருகி சாம்பலானது.

    அதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×