search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    12 போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு- தமிழக அரசு உத்தரவு

    12 போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக போலீஸ் துறையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஐ.பி.எஸ். பணி இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதே போன்று தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள டி.ஜி.பி.க்கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.களுக்கான பதவி உயர்வு அளிப்பதற்கும் அனுமதி பெற வேண்டும்.

    அதன்படி இந்த உயரிய பதவி இடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 14-ந் தேதி அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக போலீஸ் துறையின் பேனல் கமிட்டி கூட்டம் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பதவி உயர்வு பெறும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 4 ஐ.ஜி.க்கள் கூடுதல் டி.ஜி.பி.க்களாகவும், 8 டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் நல்வாழ்வு பிரிவு ஐ.ஜி. எஸ்.என்.சேஷசாயி, அயல் பணியில் உள்ள சந்தீப் மிட்டல், பால நாகதேவி ஆகிய 4 அதிகாரிகள் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

    உளவுத்துறை டி.ஐ.ஜி. என்.கண்ணன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி. பவானீஸ்வரி, சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகிய 8 அதிகாரிகளுக்கு ஐ.ஜி. பதவி கிடைத்துள்ளது.

    போலீஸ் எஸ்.பி.க்கள் ஏ.சரவணன், சேவியர் தன்ராஜ், பிரவேஷ் குமார், அனில் குமார் கிரி, எஸ்.பிரபாகரன், ஏ.கயல்விழி, ஆர்.சின்னசாமி ஆகிய 7 அதிகாரிகள் டி.ஐ.ஜி. பதவிக்கான தகுதி பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பதவி உயர்வு பெற்றுள்ள அதிகாரிகளுக்கான புதிய பணி இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×