search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்நடை மருத்துவர்கள் யானைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்த காட்சி.
    X
    கால்நடை மருத்துவர்கள் யானைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்த காட்சி.

    நலவாழ்வு முகாமில் யானைகளின் ரத்த மாதிரி சேகரிப்பு

    யானைகளுக்கு சர்க்கரை நோய் தாக்கி உள்ளதா என்பதை கண்டறிவதற்காக முகாமிலுள்ள 28 யானைகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் கலந்துகொண்ட யானைகளுக்கு காலை மாலை இரண்டு வேளையும் நடைபயிற்சியும், குளியல் மேடை மற்றும் ‌ஷவர் மேடையில் யானைகள் குளித்து விளையாடி மகிழ்கின்றன.

    அதன்பின்னர் யானைகளுக்கு சமச்சீர் உணவு பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினரால் தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவ்வப்போது உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குடற்புழு நோய் தாக்கி உள்ளதா என்பதை கண்டறிவதற்காக யானைகளின் சாணம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் யானைகள் குடற்புழு நோயால் தாக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து யானைகளுக்கு சர்க்கரை நோய் தாக்கி உள்ளதா என்பதை கண்டறிவதற்காக முகாமிலுள்ள 28 யானைகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி தலைமையில் கோவை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு டாக்டர்கள் ராஜாங்கம், கீதா மகாலிங்கம், இளங்கோ, மயில் குமார், தாமோதரன் கார்த்திகேயன், லுக்மான்அலி சவிதா, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் பாசுமணி ராஜ்குமார் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் எட்வர்டு சரவணன் ஆகியோர் முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்த மாதிரி எடுத்து சேகரித்தனர். ரத்த மாதிரிகளை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சோதனையின் மூலம் யானைகளின் ஈரல் சிறுநீரகம் மற்றும் உடல் பாகங்களின் செயல்பாடு குறித்தும், குளுக்கோஸ் மற்றும் அணுக்களின் எண்ணிக்கை மற்றும் சர்க்கரை நோய் தாக்கி உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.




    Next Story
    ×