search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம் (கோப்புப்படம்)
    X
    நீதிமன்றம் (கோப்புப்படம்)

    ஒரு ரூபாய் திருப்பிக்கொடுக்காத கண்டக்டருக்கு ரூ.1,500 அபராதம்

    பயணிக்கு ஒரு ரூபாய் திருப்பிக்கொடுக்காத கண்டக்டருக்கு ரூ.1,500 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கடலூர் மாவட்டம் அல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தன்.

    2015-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி முருகானந்தன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். வடசேரியில் இருந்து சென்னைக்கு வந்த அந்த பஸ்சில் கட்டணமாக 124 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    முருகானந்தன் அந்த பஸ் கண்டக்டரிடம் ரூ.125 கொடுத்தார். ஆனால் அவர் மீதி ஒரு ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பயனில்லை. எனவே இதுகுறித்து வடசேரியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக மேலாளரிடம் முருகானந்தன் புகார் செய்தார்.

    போக்குவரத்து கழகம் சார்பில் கண்டக்டர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நுகர்வோர் கோர்ட்டை முருகானந்தன் அணுகினார். நஷ்டஈடாக ரூ.80 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முறையிட்டார்.

    இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு பெஞ்ச் இது குறித்து விசாரணை செய்தது. அப்போது ஒரு பயணிக்கு மீதி தொகையை கொடுக்க வேண்டியது கண்டக்டரின் கடமை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுகர்வோர் கோர்ட்டு ஒரு ரூபாயை திருப்பி கொடுக்காத கண்டக்டர், பயணி முருகானந்தனுக்கு ரூ.1,500 இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 4 வருடங்கள் போராடி இந்த இழப்பீட்டை அவர் பெற்றுள்ளார்.
    Next Story
    ×