search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 7 ஆயிரத்து 43 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாயில் வழக்கம் போல 800 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவே நீடிக்கிறது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×