search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
    X
    மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு

    நீர்ப்பிடிப்பில் விடிய விடிய மழை - மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

    நீர்ப்பிடிப்பு பகுதியில் விடிய விடிய பெய்த மழையினால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆண்டிப்பட்டி தாலுகா மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக முல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 128.40 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 129 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 1478 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3095 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4482 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் வைகை அணையின் நீர்மட்டமும் 59.61 அடியாக உள்ளது. வரத்து 1983 கன அடி. திறப்பு 1560 கன அடி. இருப்பு 3531 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.60 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.77 அடி. வரத்து 229 கன அடி. திறப்பு 30 கன அடி.

    பெரியாறு 8.8, தேக்கடி 25, கூடலூர் 17, சண்முகா நதி அணை 5, உத்தமபாளையம் 0.2, வீரபாண்டி 11, வைகை அணை 26, மஞ்சளாறு 16, சோத்துப்பாறை 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    Next Story
    ×