search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த தீயணைப்பு துறை ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்கு

    புதுச்சேரி அருகே புதுப்பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த தீயணைப்பு துறை ஊழியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை அபிஷேகப் பாக்கம்- மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி வண்ணன். இவர் வானூர் தீயணைப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், லாஸ்பேட்டை நாவற்குளம் பொதிகை நகரை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது சரண்யாவுக்கு 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை அவரது பெற்றோர் வாங்கி கொடுத்தனர். மேலும் மணிவண்ணனுக்கு 3 பவுன் நகையும், திருமண செலவுக்கு ரூ.1½ லட்சம் ரொக்க பணமும் கொடுத்தனர்.

    இதற்கிடையே திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புதிதாக சொகுசு கார் மற்றும் கூடுதல் வரதட்சணை கேட்டு மணிவண்ணன் மற்றும் அவரது தாய் காஞ்சனா மற்றும் சுகோதரிகள் கவிதா, சுமதி ஆகியோர் சரண்யாவை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் சரியாக சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதனை சரண்யாவின் சகோதரர் தட்டிக்கேட்ட போது அவரை மணிவண்ணன் குடும்பத்தினர் மிரட்டினர்.

    தொடர்ந்து மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் திருமணம் முடிந்து மறு மாதமே சரண்யா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இதற்கிடையே சரண்யாவிடம் விவாகரத்து கேட்டு மணிவண்ணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை அறிந்த சரண்யா தன்னை வரதட்சணை கொடுமை செய்த மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    Next Story
    ×