search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை காந்திபார்க்கில் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
    X
    கோவை காந்திபார்க்கில் வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

    ப.சிதம்பரம் கைதை கண்டித்து கோவையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கைதை கண்டித்து கோவையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சிதம்பரம் டெல்லியில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என். கந்தசாமி, வீனஸ் மணி, கணபதி சிவகுமார், சந்திரகுமார், வக்கீல் கருப்பசாமி, பச்சமுத்து, திருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, குமரேசன், திலகவதி, தமிழ்ச்செல்வன், ராம நாகராஜ், காந்தகுமார், துளசிராஜ், கோட்டை செல்லப்பா, காமராஜ் துல்லா, பாலசுப்பிரமணியன், காந்தி, பாசமலர் சண்முகம் உள்பட 200-க்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் மீது பொய் வழக்குப் போட்டதாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் கோவை காந்தி பார்க் ரவுண்டானா சந்திப்பில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐ.என்டி.யூ.சி.மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வன், வர்த்தகப் பிரிவு மாவட்ட தலைவர் ஹரிஹரசுதன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், ஹெச்.எம்.எஸ் ராஜாமணி, அழகு ஜெயபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன் குமார், சொக்கம்புதூர் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் காயத்ரி, சோபனா மற்றும் பழையூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆறுச்சாமி, சோமு, தங்கமணி, சின்னராஜ், கே.பி.செல்வராஜ், குனிசை செல்வம், பாலசுந்தரம், தங்கதுரை, சக்தி சதீஷ், கோவை ஹனிபா, சர்க்கிள் தலைவர் லாலி ரோடு செல்வம், வெள்ளிங்கிரி, ஆனந்த், ராஜேந்திரன், பேரூர் மயில், ஜெயக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×