search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசார் ஆர்ப்பாட்டம்"

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமை தாங்கினார்.

    வட்டாரத் தலைவர் ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

    மேலும் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சின்னசாமி, ஆனிமுத்து, ஜார்ஜ், சவேரியார், பிரபாவதி, பால்பாண்டி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    வந்தவாசி அடுத்த தெள்ளாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்றது

    அரியலூர்:

    விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்நடை பெற்றது. இதன்படி அரியலூர் பேருந்துநிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன் அழகானந்தம், மாவட்ட பொறுப்பாளர்கள் அமானுல்லா, பாலசிவகுமார், தியாகராஜன், அழகானந்தம், ரவிச்சந்திரன், சகுந்தலா தேவி, பழனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.

    இதைபோல் ஜெயங்கொண்டம் நகரத்தில் சிதம்பரம் சாலையிலிருந்து நான்கு ரோட்டில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள்தா.பழூர் சரவணன் ஜெயங்கொண்டம் வடக்கு சக்திவேல், தெற்குகண்ணன், ஆண்டிமடம் வடக்கு சாமிநாதன், தெற்கு வேல்முருகன், உடையார்பாளையம் நகர காங்கிரஸ் தலைவர் அக்பர் அலி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ஆனந்தராஜ்,

    மாவட்ட சிறுபான்மை தலைவர் குருசாமி,ஜெயங்கொண்டம் வட்டார நிர்வாகிகள்பன்னீர்செல்வம், தர்மலிங்கம், ராமச்சந்திரன், ஜம்பு, ரெங்கநாதமூர்த்தி, அந்தோனி டேவிட், ஜெயங்கொண்டம் நகர நிர்வாகிகள்ஜெ கநாதன், சந்திரசேகரன், தங்கராசு, ரமேஷ், காளிமுத்து, மற்றும் உடையார்பாளையம் ஆண்டிமடம் இலையூர் நிர்வாகிகள்இளைஞர் காங்கிரஸ்மா வட்டதுணைத்தலைவர் சிற்றரசன், ஜெயப்ரகாஷ்தீபன், மதன் உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.
    • காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஜெயமீனா முருகானந்தம், மாநில செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் நத்தம் தொகுதி தலைவர் சுடர்வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்றது

    திருச்சி:

    அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ராகுல் காந்தி அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு மாவட்டத் தலைவர் ஜவஹர் முன்னிலையில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன்,மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்யராஜ், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன், கவுன்சிலர்கள் சுஜாதா. சோபியா விமலா ராணி, பேட்ரிக் ராஜ்குமார், ராஜா டேனியல் ராய், சரவண சுந்தர், ஜி கே முரளி ராஜலிங்கம், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ் ,

    மாவட்ட துணைத்தலைவர்கள் கிரேசி ஜார்ஜ், மகேந்திரன்,முரளி சார்லஸ் மெய்யநாதன்,சிக்கல் சண்முகம் , மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா,உறையூர் எத்திராஜூ அண்ணாசிலை விக்டர் மணிவேல், அரியமங்கலம் சக்திவேல், தாரநல்லூர் மாணிக்கவாசகம், உய்யகொண்டான் திருமலை பாஸ்கர், மலைக்கோட்டை சேகர் ஹெலன், அமிர்தவள்ளி, டேவிட், பட்டேல், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவி ஜோதி பிரியங்கா

    பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ், மீனவர் காங்கிரஸ் தனபால், மகளிர் அணி ஷீலா செல்ஸ், கோகிலா, வசந்தி, விஜயலட்சுமி, ரோஸி, வக்கீல் வனஜா. ஜெனித்தா மேரி,ரேணுகா, மகா கனக ஜோதி சந்திரா, ராதா தீபா ஸ்டெல்லா, மலர் வெங்கடேஷ், பிரியங்கா பட்டேல், அல்லூர் எழிலரசன்,அன்பில் ராஜேந்திரன். சரோஜாதேவி, ரகமத்துல்லா, நல்லுசாமி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், வேங்கைராஜா, ஒழுங்கு நடவடிக்கை குழு முகமது சித்திக், துணை தலைவர் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரோஜாம்மாள், காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவர் அப்பாஸ் மந்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான பொய் வழக்கை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • 10 வருடத்திற்கு முன்பு கொடுத்த பொய் புகார் மீது நடவடிக்கை எடுத்துவரும் அமலாக்கத்துறையை கண்டித்தும் எம்.பி.க்களை தாக்கியதை கண்டித்து கட்சியினர் கோஷம்

    திருச்சி:

    காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்புக்கிணங்கவும் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வேண்டுகோளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் திருவெறும்பூர் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் செந்தில்குமார், ரகுவரன், துவாக்குடி நகர தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் எழிலரசன், மலை ஆனந்தன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தன், கும்பக்குடி தங்கவேல், தொண்டமான்பட்டி பாலு, சூரியூர் தங்கராஜ், கூந்தை மாணிக்கம், நடவை சந்திரசேகர், கிளியூர் கல்யாணசுந்தரம், துவாக்குடி மோகன், பாலு, முருகானந்தம், சந்திரமோகன், ஆர். இ.சி.மணி,

    கோட்ட தலைவர் ஆனந்தராஜ், துணைத் தலைவர் செய்யது இப்ராகிம்,திருச்சி மாநகர பொதுசெயலாளர் சேக் தாவுத், மகளிர் அணி லட்சுமி, மணிமேகலை, அரசன்குடி சித்திரா, உள்பட மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிராம கமிட்டி நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் 10 வருடத்திற்கு முன்பு கொடுத்த பொய் புகார் மீது நடவடிக்கை எடுத்துவரும் அமலாக்கத்துறையை கண்டித்தும் எம்பிக்களை தாக்கியதை கண்டித்தும், பொய்வழக்கு போடாதே வழக்கை வாபஸ் வாங்கு எதையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கின்றோம், எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றும், மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் டெல்லி போலீசாரை வன்மையாக கண்டிக்கிறோம் என்று காங்கிரசார் கோஷமிட்டனர்.

    • பா.ஜ.க அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    ராகுல்காந்தியை அராஜக முறையில் விசாரணை செய்து வரும் பா.ஜ.க அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வி .எம். சி. மனோகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் எம் என் கந்தசாமி, அழகு ஜெயபால், மாநில பொதுச் செயலாளர்கள் சரவணகுமார், மகேஷ்குமார், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராம்கி என்ற ராமகிருஷ்ணன், முன்னாள் மேயர்காலணி வெங்கடாசலம், கவுன்சிலர் காயத்ரி, ராயல் மணி, வளர்மதி கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் அதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    ×