search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மோகனா-கைது செய்யப்பட்ட வீராசாமி
    X
    கொலை செய்யப்பட்ட மோகனா-கைது செய்யப்பட்ட வீராசாமி

    ரெயில்வே பெண் ஊழியரை துடிக்க துடிக்க கொன்ற கள்ளக்காதலன்

    சென்னை பெரியமேட்டில் ரெயில்வே பெண் ஊழியரை துடிக்க துடிக்க கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் வகையில் போலீசார் துப்பு துலக்கினர்.
    சென்னை:

    பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் திருவொற்றியூரை சேர்ந்த ரெயில்வே பெண் ஊழியர் மோகனா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் வீராசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கணவர் ரூபேஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்த மோகனா, கை நிறைய சம்பளம் வாங்கி கள்ளக்காதலன் வீராசாமியுடன் ஊர் சுற்றியது பற்றியும், அவர் கொடூரமாக கொலையுண்டது குறித்தும் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இந்த வழக்கில் போலீசார் சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பு துலக்கியுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மோகனா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் தனிப்படை போலீசார் லாட்ஜுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோகனாவுடன் தங்கி உல்லாசம் அனுபவித்து விட்டு அவரை கொலை செய்து தப்பிய வீராசாமி தனது பெயரை தேவேந்திரன் என்று கூறி போலி அடையாள அட்டையை லாட்ஜில் கொடுத்துள்ளார்.

    இதனை கீழே கிடந்து எடுத்துள்ளார். அதில் திருத்தணி முகவரி இருந்துள்ளது. இதனால் ஒரு தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்த விரைந்தனர்.

    இந்த நிலையில் மோகனாவின் கைப்பையில் செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது. போலீசார் எடுத்து பேசினர். எதிர்முனையில் ஆண் குரல் கேட்டது. அவரிடம் நீங்கள் யார்? என்று போலீசார் விசாரித்தனர். இதற்கு பதில் அளித்த அந்த நபர் தான் மோகனாவின் கணவர் ரூபேஸ் என்று கூறியுள்ளார். உடனே போலீசார் மோகனா கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்தனர்.

    மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும் ரூபேஸ் அவ்வப்போது போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

    கொலை செய்யப்பட்ட அன்று மோகனாவுக்கு இரவு பணியாகும். அவர் வேலைக்கு செல்லாததை அறிந்துதான் ரூபேஸ் போன் செய்துள்ளார். இவரும் ரெயில்வேயில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரது போன் அழைப்புக்கு பிறகே கொலை செய்யப்பட்டது மோகனா என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இதன் பின்னர் கொலையாளி யார்? என்பது பற்றி துப்பு துலக்கினர்.

    திருவொற்றியூரில் மோகனா வசித்து வந்த ரெயில்வே குடியிருப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் கொலையாளி வீராசாமி பற்றி துப்பு துலங்கியது.

    போதைக்கு அடிமையான வீராசாமி, மோகனாவின் வீட்டுக்கு சென்று வாசலில் விழுந்து கிடந்ததும், இதனால் திருவொற்றியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் பெரியமேடு போலீசுக்கு தெரிய வந்தது. உடனடியாக திருவொற்றியூர் போலீசிடமிருந்து வாட்ஸ்அப்பில் வீராசாமியின் போட்டோவை வாங்கினர்.

    இந்த போட்டோவை வைத்து வீராசாமியை பிடிக்க இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போதுதான் திருவொற்றியூரில் பதுங்கி இருந்த வீராசாமி பிடிபட்டார். எப்போதுமே குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு செல்போன்கள் போலீசுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளன. அந்த வகையில் மோகனாவின் செல்போனே இந்த வழக்கில் உடனடியாக துப்பு துலக்குவதற்கு வசதியாக அமைந்திருந்தது.

    ஒரு வேளை கொலையாளி வீராசாமி செல்போனை எடுத்துச் சென்று எங்காவது வீசிவிட்டு சென்றிருந்தால் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கும்.

    மோகனாவை வீராசாமி மிகவும் கொடூரமாக தாக்கி துடிக்க துடிக்க கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த வீராசாமி, தனது கையை மடக்கி வைத்துக் கொண்டு மோகனாவின் மார்பில் பல முறை பலமாக தாக்கியுள்ளார். இதில் எலும்பு முறிந்து நுரையீரலில் குத்தியது. அதேபோல மோகனாவின் மர்ம உறுப்பிலும் வீராசாமி பலமாக தாக்கி உள்ளார்.

    இதில் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மோகனா உயிர் இழந்துள்ளார். இதன் பிறகே உடலை தூக்கில் தொங்க விட்டுவிட்டு வீராசாமி தப்பி சென்றுள்ளார்.
    Next Story
    ×