search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறைக்காற்றிற்கு ஆசிரமம்-ஈத்தங்காடு புறவழிச்சாலையில் இருந்த தடுப்புவேலிகள் கீழே விழுந்துகிடக்கும் காட்சி
    X
    சூறைக்காற்றிற்கு ஆசிரமம்-ஈத்தங்காடு புறவழிச்சாலையில் இருந்த தடுப்புவேலிகள் கீழே விழுந்துகிடக்கும் காட்சி

    குமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 5 அடியை எட்டியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    நாகர்கோவில், கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், கோழிப்போர் விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 5 அடியை எட்டியது. அணைக்கு 623 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 488 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39 அடியை எட்டியது. அணைக்கு 333 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்றிரவும் பயங்கர சூறைக் காற்று வீசியது. சூறைக் காற்றிற்கு கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், அஞ்சு கிராமம், குளச்சல் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து நாசமானது.

    சூறைக்காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. ஆசிரமம்-ஈத்தங்காடு புறவழிச்சாலையில் கற்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளும் சூறைக் காற்றிற்கு தூக்கி வீசப்பட்டன. ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் காற்றாலைகள் வேகமாக இயங்கியது.

    புத்தேரி பகுதியில் வீசிய சூறைக்காற்றால் அந்த பகுதியில் உள்ள குளத்தின் கரையில் சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-6.2, பெருஞ்சாணி-5.6, சிற்றாறு-1-23.2, சிற்றாறு-2- 21, சுருளோடு-5, கன்னிமார்-5.4, பாலமோர்- 21.2, கொட்டாரம்-3.2, இரணியல்-2.4, ஆணைக்கிடங்கு-8.2, குளச்சல்-3.2, அடையாமடை-7, முள்ளாங்கினாவிளை-9, புத்தன் அணை-4.2, திற்பரப்பு-6.6, பாலமோர்-21.2, கொட்டாரம்-3.2.
    Next Story
    ×