search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் ஆற்றில் கருப்பு நிறமாக வந்த தண்ணீர்.
    X
    நொய்யல் ஆற்றில் கருப்பு நிறமாக வந்த தண்ணீர்.

    சூலூர் பட்டணம்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் கருப்பு நிறமாக வந்த தண்ணீர்- பொதுமக்கள் அதிர்ச்சி

    சூலூர் பட்டணம்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் தண்ணீரின் நிறம் கருப்பாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சூலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் கோவையில் உள்ள குளங்களில் வாய்க்கால்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. புறநகர் பகுதிக்கு செல்லும் நொய்யல் ஆற்று தண்ணீரில் சாக்கடை கழிவுநீரும், சாயக்கழிவுகளும் கலந்து வருகின்றன.

    இதனை பொதுமக்கள், விவசாயிகள் உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த தண்ணீர் பட்டணம்புதூரை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தண்ணீரின் நிறம் கருப்பாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நொய்யல் நதிமீட்புபடை அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நொய்யல் ஆற்றில் தெளிந்த நீர் வந்தது. தற்போது சாயப்பட்டறை உரிமையாளர்கள் மழைகாலத்தில் தங்களது நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை ஆற்றில் திறந்து விடுவதால் நொய்யல் ஆறு மாசடைந்துவிட்டது என்றார்.

    மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளில் நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால் தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்துள்ளது. எனவே இதில் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×