search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நந்தினி- நிரஞ்சனா
    X
    நந்தினி- நிரஞ்சனா

    மதுக்கடைக்கு எதிராக போராட்டம்: வக்கீல் நந்தினியின் சகோதரி இன்று கைது

    மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய வக்கீல் நந்தினியின் தங்கை நிரஞ்சனாவும் இன்று கைது செய்யப்பட்டார்.

    மதுரை, ஜூலை.8-

    மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய வக் கீல் நந்தினியின் தங்கை நிரஞ்சனாவும் இன்று கைது செய்யப்பட்டார்.

    மதுரையைச் சேர்ந்த இளம்பெண் வக்கீல் நந்தினி, டாஸ்மாக் கடை களை மூட வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    தனது தந்தை ஆனந்தனு டன் சேர்ந்து மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் கைகளில் மது எதிர்ப்பு பேனர் ஏந்தி கோ‌ஷம் எழுப்பி கைதாகி உள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடந்த போராட்டத்தின் போது போலீசாருடன் வாக்கு வாதம் செய்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக விசார ணைக்காக திருப்பத்தூர் கோர்ட்டுக்கு வந்த நந்தினி, நீதிமன்ற காவலரிடம் குறுக்கு விசாரணை நடத்தி னார். இதனை மாஜிஸ் திரேட்டு சாமூண்டீஸ்வரி பிரபா கண்டித்தபோது, நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் கோர்ட்டு அவமதிப்பு செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.

    இதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நந்தினியும், ஆனந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். இதனால் கடந்த 5-ந் தேதி நடக்க இருந்த நந்தினியின் திருமணமும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நந்தினியின் தங்கையும், மதுரை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி யுமான நிரஞ்சனா, டாஸ் மாக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

    அவர் இன்று காலை மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

    இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப் பட்டது. சட்டக்கல்லூரி முன்பு பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டது. இன்று காலை சக மாணவிகளுடன் நிரஞ்சனா அங்கு வந்தார்.

    பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி தல்லாகுளம் போலீ சார் நிரஞ்சனாவை கைது செய்தனர். தந்தை மற்றும் சகோத ரியை தொடர்ந்து நிரஞ்ச னாவும் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    * * * நந்தினி நிரஞ்சனா

    Next Story
    ×