search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    பெட்ரோல்-டீசல் வரிவிதிப்பு: விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் - விக்கிரமராஜா

    பெட்ரோல்-டீசல் வரி விதித்திருப்பது, விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்று விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    2019-20-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வரலாற்றிலே முதல் முறையாக மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையின் போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புறநானூறு பாடலை மேற்கோள்காட்டி அதற்கான விளக்கத்தையும் அளித்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ள, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை வாசிக்கின்ற தமிழ்நாட்டின் முதல் பெண்மணி, என்ற பெருமை பெற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, ஆண்டுக்கு ரூ. 1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் ஜி.எஸ்.டி பதிவுபெற்ற சிறு வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

    அதே சமயம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் எடுத்துக்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

    பெட்ரோல் டீசல் விலையில் 2 சதவீத செஸ் வரி விதித்திருப்பது, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களையும் மட்டுமன்றி, போக்குவரத்து வாகனங்களின் செலவினங்களையும் பெருக்கி விலைவாசி உயர்வுக்கு வித்திட்டு அதனால் பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும் அபாய நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

    பேரமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையான சுங்கச்சாவடி அகற்றம் மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் குறைப்பு இன்னும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. நிதிநிலையில் மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியபிறகும், பொதுமக்களுக்கான சுங்கச்சாவடி பயன்பாட்டு கட்டணம் போன்ற முக்கிய அம்சங்கள் இன்னும் கவனிக்கப்படாதது வருத்த மளிக்கிறது.

    எங்களின் நீண்டநாள் கோரிக்கையான சிறுகுறு வணிகர்களின் வாழ் வாதாரப் பிரச்சினையான, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை உள்ளே நுழைய அறவே அனுமதிக்க கூடாது. மாற்று வழிகளிலும் திணிக்கக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×