search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லை குப்புற கவிழ்ந்து கிடக்கும் பஸ்சில், தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
    X
    லை குப்புற கவிழ்ந்து கிடக்கும் பஸ்சில், தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    விருதுநகரில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: மாணவர்-பெண் பலி

    விருதுநகரில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலிடெக்னிக் மாணவர், பெண் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகரில் இருந்து சிவகாசி வழியாக ராஜபாளையத்திற்கு தனியார் பஸ் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இன்று காலை 8 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டது.

    பஸ்சில் மாணவ- மாணவிகள் பணிக்குச் செல்வோர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    அழகாபுரி விலக்கு பகுதியில் பஸ் சென்ற போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினர்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் வலதுபுறம் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என கூக்குரல் எழுப்பினர்.

    பஸ் கவிழ்ந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பஸ்சுக்கு அடியில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். பஸ் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்ததால் அவர்களால் வேகமாக மீட்பு பணி செய்ய முடியவில்லை.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து அதிரடியாக பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் விருதுநகர், சூலக்கரையைச் சேர்ந்த குட்டியம்மாள் (வயது 60), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சசிக்குமார் (20) ஆகியோர் பஸ்சின் அடியில் சிக்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. அவர்களது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் பள்ளிக்கூட பைகள் அதிக அளவில் கிடந்தன. இதனால் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×