search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராஜேஷ் லக்கானி மாற்றம் - தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
    X

    ராஜேஷ் லக்கானி மாற்றம் - தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராகேஷ் லக்காணி மாற்றப்பட்டு, சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநராக உள்ள சத்யபிரதா சாஹூ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் ராஜேஷ் லக்காணி பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் லக்காணி முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்க தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநராக இருக்கும் சத்யபிரதா சாஹூ புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிகிறது. ராஜேஸ் லக்காணி மத்திய அரசுப்பணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #TamilNews
    Next Story
    ×