என் மலர்

  செய்திகள்

  தஞ்சையில் எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் வெட்டிக் கொலை
  X

  தஞ்சையில் எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் வெட்டிக் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் எலக்ட்ரிக்கல் கடையின் விற்பனையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

  தஞ்சாவூர்:

  புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவரது மனைவி சத்யா இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் தஞ்சை யாகப்பா நகரில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

  இவர் தினமும் இரவு எலக்ட்ரிக்கல் கடையில் விற்பனையான பணத்தை எண்ணி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நேரங்களில் இரவு வீட்டிற்கு செல்லாமல் கடையிலேயே தங்கி வந்ததுள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் அவர் வீட்டிற்கு செல்லாமல் கடையிலேயே தங்கியுள்ளார்.

  இன்று காலை அந்த கடையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வரும் ஜார்ச் என்பவர் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் இரும்பு கதவு திறந்து கிடந்தது. மாடியில் சென்று அவர் பார்த்த போது அங்கு ரமேஷ் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் கீழ்தளத்தில் கவரில் சாப்பாடு பொட்டலம் இருந்தது.

  இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி. தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் ரமேசின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  ரமேஷ் நேற்று இரவு அருகில் இருந்த ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி வந்ததுள்ளார்.

  சாப்பாடு பொட்டலத்தை கீழ் தளத்தில் வைத்து சாப்பிட சென்றார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் ரமேசை வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மாடிக்கு ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் விரட்டி சென்று மர்மநபர்கள் அங்கேயே வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

  மேலும் கடையில் இருந்த பணம் கொள்ளையடிக்க ப்பட்டிருக்கலாம் என கடையின் உரிமையாளர் கூறியதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இன்று காலை கும்பகோணம் பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சையிலும் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் ஒரே நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×