என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
    • ரத்தப்போக்கு நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை.

    அவர் இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் சில 'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. ரத்தப்போக்கு நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் விலா எலும்பு பகுதியில் காயமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ICUவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் உடல்நிலை குறித்து டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் அப்டேட் கொடுத்துள்ளார்.

    அதன்படி அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நல்ல முறையில் நலம் பெற்று வருகிறார். சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். ஆனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை. 

    என கூறினார்.

    மேலும் பிசிசிஐ தரப்பில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஷ்ரேயாஸ் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா விரைகிறார்கள்.

    • இரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. கடைசி 2 போட்டிகள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.ஆனால் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கே தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவில் நேரம் மாறுபட்டாலும் இந்தியாவில் அதே நேரத்தில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 165 ரன்கள் சேர்த்தது.
    • வங்கதேசம் 149 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது.

    வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்கதேசம் 2-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 46 ரன்களும், ரோவ்மன் பொவேல் 28 பந்தில் 44 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட்டிங் செய்தது. முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தவ்ஹித் ஹிரிடோய் 28 ரன்கள் அடித்தார். தன்சிம் ஹசன் ஷகிப் 33 ரன்களும், நசும் அகமது 20 ரன்களும் அடித்த போதிலும் வங்கதேசம் அணி 19.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெய்டன் சீல்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
    • நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

    பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

    பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

    • நாகாலாந்து 31 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
    • 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் சதம் விளாசினர்.

    ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு- நாகாலாந்து இடையிலான போட்டி கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. விமல் குமார் (189), பிரதோஷ் ரஞ்சன் பால் (201) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 512 ரன்கள் குவித்து தமிழ்நாடு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் நாகாலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. நிஸ்சால் 80 ரன்களுடனும், யுகாந்தர் சிங் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிஸ்சால் தொடர்ந்து விளையாடி சதம் விளாசினார். யுகாந்தர் சிங் 67 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு நிஸ்சால் உடன் இம்லிவாதி லெம்தூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை தமிழ்நாடு பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இவரும் நங்கூரம் பாய்ச்சி ஆடுகளத்தில் நின்றுவிட்டனர்.

    லெம்தூரும் சதம் விளாசினார். இருவரும் 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். நிஸ்சால் 161 ரன்களுடனும், லெம்தூர் 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். குர்ஜப்னீத் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி ஈடன் கார்டனில் தொடங்க உள்ளது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

    இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி ஈடன் கார்டனில் தொடங்க உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனான பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி விவரம்:

    டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன்.

    • இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
    • ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீரராக விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    மகளிர் உலகக்கோப்பை தொடரில் நேற்று அரங்கேறிய 28-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு தொடரில் பாதியில் ரத்தான 6-வது ஆட்டம் இதுவாகும்.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் பீல்டிங்கின்போது இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கைத்தாங்கலாக வெளியே அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், பிரதிகா ராவல் காயம் காரணமாக விளையாட முடியாவிட்டால், ஹர்லீன் டியோல் ஸ்மிரிதி மந்தனாவுடன் தொடக்க வீரராக விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரதிகா சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
    • இதனால் ஷ்ரேயஸ் ஐயருக்கு வயிற்றில் அடிபட்டது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் ஷ்ரேயஸ் ஐயருக்கு வயிற்றில் அடிபட்டது. இதனை தொடர்ந்து வலிதாங்க முடியாமல் அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கேட்ச் பிடித்த போது அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. உடலுக்குள் ரத்த கசிவு இருப்பதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது.

    மும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

    கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின.

    இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை)ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறல் செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மானபங்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நவிமும்பையில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு
    • ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கை மற்றும் காலில் மாவுக்கட்டுடன் குற்றவாளியை போலீசார் அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து பேசிய மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம். கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு மிகப்பெரிய மோகம் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் வருவதற்கு முன்பு பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை இது வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுகிறார் என பாஜக அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிவதை தனக்குப் பிடிக்காது என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    மும்பை:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், நவி மும்பையில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 27 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் ராதா ராணி 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மழை காரணமாக 27 ஓவரில் 126 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இந்திய அணி 8.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஸ்மிருதி மந்தனா 34 ரன்னும், அமன்ஜோத் கவுர் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்மூலம் இந்திய அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 7வது இடம் பிடித்தது.

    • ரகானே இந்திய அணிக்காக கடைசியாக 2023ல் விளையாடினார்.
    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ரகானே, மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். உள்ளூர் பேட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், தேர்வாளர்கள் அவரை பரிசீலனை செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.

    37 வயதாகும் ரகானே, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில், 2024-25 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என படுதோல்வியடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு நான் தேவை என உணர்ந்ததாக ரகானே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-

    வயது வெறும் நம்பர்தான். ஒரு வீரராக உங்களுக்கு அனுபவம் இருந்தால், இன்னும் உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தால், உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்துக் கொண்டிருந்தால், தேர்வாளர்கள், உங்களை இந்திய சீனியர் அணிக்கு பரிசீலனை செய்ய வேண்டும்.

    தேர்வு வயதை பற்றியது அல்ல. அது நோக்கத்தை பற்றியது. அது ரெட்பால் கிரிக்கெட்டின் பேரார்வம் பற்றியது. நீங்கள் ஆட்டத்தில் கொடுக்கும் கடின உழைப்பை பற்றியது. இதனால் வயதை நான் முற்றிலுமாக நம்பவில்லை.

    ஆஸ்திரேலியாவை பார்த்தீர்கள் என்றால், மைக் ஹசி 30 வயதிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனார். அதன்பின்பும் அவர் ரன்கள் குவித்தார். ரெட்பால் கிரிக்கெட்டில் அனுபவம்தான் விசயம். தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நான் தேவை என்று நினைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.

    இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.

    ரகானே தலைமையில் இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் 2-1 என தொடரை வென்றது.

    2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரகானேவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    ×