என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    மும்பை:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், நவி மும்பையில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 27 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் ராதா ராணி 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மழை காரணமாக 27 ஓவரில் 126 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இந்திய அணி 8.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஸ்மிருதி மந்தனா 34 ரன்னும், அமன்ஜோத் கவுர் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்மூலம் இந்திய அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 7வது இடம் பிடித்தது.

    • ரகானே இந்திய அணிக்காக கடைசியாக 2023ல் விளையாடினார்.
    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ரகானே, மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். உள்ளூர் பேட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், தேர்வாளர்கள் அவரை பரிசீலனை செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.

    37 வயதாகும் ரகானே, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில், 2024-25 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என படுதோல்வியடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு நான் தேவை என உணர்ந்ததாக ரகானே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-

    வயது வெறும் நம்பர்தான். ஒரு வீரராக உங்களுக்கு அனுபவம் இருந்தால், இன்னும் உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தால், உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்துக் கொண்டிருந்தால், தேர்வாளர்கள், உங்களை இந்திய சீனியர் அணிக்கு பரிசீலனை செய்ய வேண்டும்.

    தேர்வு வயதை பற்றியது அல்ல. அது நோக்கத்தை பற்றியது. அது ரெட்பால் கிரிக்கெட்டின் பேரார்வம் பற்றியது. நீங்கள் ஆட்டத்தில் கொடுக்கும் கடின உழைப்பை பற்றியது. இதனால் வயதை நான் முற்றிலுமாக நம்பவில்லை.

    ஆஸ்திரேலியாவை பார்த்தீர்கள் என்றால், மைக் ஹசி 30 வயதிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனார். அதன்பின்பும் அவர் ரன்கள் குவித்தார். ரெட்பால் கிரிக்கெட்டில் அனுபவம்தான் விசயம். தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நான் தேவை என்று நினைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.

    இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.

    ரகானே தலைமையில் இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் 2-1 என தொடரை வென்றது.

    2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரகானேவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    • இங்கிலாந்துக்கு எதிராக 28 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி கேப்டன் ஷோபி டிவைன் அறிவித்திருந்தார்.

    காலிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலையில், இன்று இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய கடைசி லீக் போட்டி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாகும்.

    கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க ஷோபி டிவைன் விரும்பினார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 168 ரன்னில் சுருண்டது. ஷோபி டிவைன் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அத்துடன் இங்கிலாந்து 29.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் கடைசி போட்டி ஷோபி டிவைனுக்கு வெற்றிகரமாக அமையவிலலை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஏமாற்றம் அளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை உயர்ந்த இன்னிங்ஸ் மற்றும் வெற்றியுடன் முடிக்க விரும்பினேன். இங்கிலாந்து அணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    36 வயதான ஷோபி டிவைன் 2006 ஆண்டு ஆக்டோபர் 18ஆம்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும், 22ஆம் தேதி ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.

    159 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 18 அரைசதங்களுடன் 4279 ரன்கள் அடித்துள்ளார். 146 டி20 போட்டிகளில் 1 சதம், 21 அரைசதங்களுடன் 3431 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளும், டி20-யில் 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    • முதலில் விளையாடிய நியூசிலாந்து 168 ரன்னில் சுருண்டது.
    • இங்கிலாந்து 29.2 ஓவரில் சேஸிங் செய்தது.

    மகளிர் உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் போடடியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 168 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணியின் லின்செ ஸ்மித் 3 விக்கெட்டும் நாட் ஸ்சிவர்-ப்ரன்ட், அலிஸ் கேப்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி தொடக்க பேட்டர் ஜார்ஜியா பிலிம்மர் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். அமெலியா கெர் 35 ரன்களும், கேப்டன் ஷோபி டிவைன் 23 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 29.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க பேட்டர் எமி ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். டாமி பியூமோன்ட் 40 ரன்களும், ஹீதர் நைட் 33 ரன்களும் சேர்த்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 7 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒன்றில் முடிவு இல்லை மூலமாக 11 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துளளது. நியூசிலாந்து ஒரு வெற்றி, 4 தோல்வி, 2 முடிவு இல்லை மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    • கொல்கத்தா அணியில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
    • சந்திரகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதனால் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்-ஐ பதவியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் அபிஷேக் நாயரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் விருப்பத்தை அபிஷேக் நாயர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அபிஷேக் சர்மா ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    தற்போது பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் சமாளித்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    • பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • விமல் குமார் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டியில் தமிழ்நாடு, நாகாலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணியின் ஆதிஷ், விமல் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆதிஷ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் களம் இறங்கினார்.

    விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 150 ரன்களை கடந்து சென்றனர். இதனால் இரட்டை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விமல் குமார் 224 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. அடுத்து அந்த்ரே சித்தார்த் களம் இறங்கினார். தமிழ்நாடு அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்திருந்தபோது நேற்றைய முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ஆவது நாள் தொடங்கியது. சித்தார்த் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 512 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபா இந்திரஜித் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை.
    • சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை.

    இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை, இந்திய அணியில் முன்னாள் தேர்வாளரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிட்னி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 236 ரன்னில் சுருட்ட, முக்கிய பங்காற்றிய ஹர்சித் ராணாவை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் ஓவன் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சூப்பர் டெலிவரி, ரோகித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    பயங்கரமான லைன் மற்றும் லெந்த் பிடித்து பந்து வீசினார். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் மோசமாக பந்து வீசினார். சிட்னியில் சிறப்பாக பந்து வீசினார்.

    சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை. சிட்னி போட்டிக்காக அனைத்து பாராட்டுக்கும் தகுதியான ஹர்சித் ராணா.

    ஆமாம், அவரை நான் அதிக அளவில் விமர்சனம் செய்துள்ளேன. ஆனால் இறுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தது மற்றும் கடைசி ஸ்பெல்லில் பயங்கரமாக பந்து வீசியதன் மூலம், இந்த போட்டிக்கு நம்பிக்கையை எடுத்து வந்துள்ளார்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    • கருண் நாயர் 174 ரன்கள் விளாசினார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் 116 ரன்கள் சேர்த்தார்.

    ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கோவா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 174 ரன்கள் விளாசினார். இதனால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர், சண்டிகாருக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்

    இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார். நியூசிலாந்து தரப்பில் சக்கரி ஃபூல்க்ஸ் 4 விக்கெட்டுகளும் ஜேக்கப் டுஃபி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்

    224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெரில் மிட்செல் 78 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 -0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.2 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தற்போது வரை 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்துள்ளது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். தனது 15 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக கேன் வில்லியம்சன் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.

    முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 121 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சேவாக்கின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    15758 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த விரேந்தர் சேவாக் சாதனையை 15,787 ரன்கள் அடித்து ரோகித் முறியடித்து அசத்தியுள்ளார். ரோகித், சேவாக்கிற்கு அடுத்தபடியாக 15,335 ரன்கள் அடித்து சச்சின் 3 ஆம் இடத்தில உள்ளார். 

    • 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது
    • 166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.

    இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் நங்கூரமிட்டு அதிரடியாக விளையாடினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் ஹாரி புரூக் ஸ்கோர்கார்டை உயர்த்தினார்.

    மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க ஜேமி ஓவர்டன் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்த நிலையில், கேப்டன் ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளைய அவர் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனால் 35.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    9 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் அதிரடியாக விளையாடி ஹாரி புரூக் அடித்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்றாக வரலாற்றில் முத்திரை படைத்தது.

    ×