என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெற்றியோடு 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பினேன்: நியூசிலாந்து கேப்டன் வருத்தம்
    X

    வெற்றியோடு 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பினேன்: நியூசிலாந்து கேப்டன் வருத்தம்

    • இங்கிலாந்துக்கு எதிராக 28 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி கேப்டன் ஷோபி டிவைன் அறிவித்திருந்தார்.

    காலிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலையில், இன்று இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய கடைசி லீக் போட்டி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாகும்.

    கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க ஷோபி டிவைன் விரும்பினார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 168 ரன்னில் சுருண்டது. ஷோபி டிவைன் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அத்துடன் இங்கிலாந்து 29.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் கடைசி போட்டி ஷோபி டிவைனுக்கு வெற்றிகரமாக அமையவிலலை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஏமாற்றம் அளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை உயர்ந்த இன்னிங்ஸ் மற்றும் வெற்றியுடன் முடிக்க விரும்பினேன். இங்கிலாந்து அணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    36 வயதான ஷோபி டிவைன் 2006 ஆண்டு ஆக்டோபர் 18ஆம்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும், 22ஆம் தேதி ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.

    159 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 18 அரைசதங்களுடன் 4279 ரன்கள் அடித்துள்ளார். 146 டி20 போட்டிகளில் 1 சதம், 21 அரைசதங்களுடன் 3431 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளும், டி20-யில் 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×