என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலக கோப்பை: கடைசி லீக்கில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    மகளிர் உலக கோப்பை: கடைசி லீக்கில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து

    • முதலில் விளையாடிய நியூசிலாந்து 168 ரன்னில் சுருண்டது.
    • இங்கிலாந்து 29.2 ஓவரில் சேஸிங் செய்தது.

    மகளிர் உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் போடடியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 168 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணியின் லின்செ ஸ்மித் 3 விக்கெட்டும் நாட் ஸ்சிவர்-ப்ரன்ட், அலிஸ் கேப்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி தொடக்க பேட்டர் ஜார்ஜியா பிலிம்மர் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். அமெலியா கெர் 35 ரன்களும், கேப்டன் ஷோபி டிவைன் 23 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 29.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க பேட்டர் எமி ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். டாமி பியூமோன்ட் 40 ரன்களும், ஹீதர் நைட் 33 ரன்களும் சேர்த்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 7 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒன்றில் முடிவு இல்லை மூலமாக 11 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துளளது. நியூசிலாந்து ஒரு வெற்றி, 4 தோல்வி, 2 முடிவு இல்லை மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    Next Story
    ×