என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
    X

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 165 ரன்கள் சேர்த்தது.
    • வங்கதேசம் 149 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது.

    வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்கதேசம் 2-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 46 ரன்களும், ரோவ்மன் பொவேல் 28 பந்தில் 44 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட்டிங் செய்தது. முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தவ்ஹித் ஹிரிடோய் 28 ரன்கள் அடித்தார். தன்சிம் ஹசன் ஷகிப் 33 ரன்களும், நசும் அகமது 20 ரன்களும் அடித்த போதிலும் வங்கதேசம் அணி 19.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெய்டன் சீல்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×