என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி: சதம் விளாசி தமிழ்நாட்டுக்கு நெருக்கடி கொடுத்த நாகலாந்து வீரர்கள்
- நாகாலாந்து 31 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
- 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் சதம் விளாசினர்.
ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு- நாகாலாந்து இடையிலான போட்டி கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. விமல் குமார் (189), பிரதோஷ் ரஞ்சன் பால் (201) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 512 ரன்கள் குவித்து தமிழ்நாடு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் நாகாலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. நிஸ்சால் 80 ரன்களுடனும், யுகாந்தர் சிங் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிஸ்சால் தொடர்ந்து விளையாடி சதம் விளாசினார். யுகாந்தர் சிங் 67 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு நிஸ்சால் உடன் இம்லிவாதி லெம்தூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை தமிழ்நாடு பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இவரும் நங்கூரம் பாய்ச்சி ஆடுகளத்தில் நின்றுவிட்டனர்.
லெம்தூரும் சதம் விளாசினார். இருவரும் 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். நிஸ்சால் 161 ரன்களுடனும், லெம்தூர் 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். குர்ஜப்னீத் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.






