என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவில் ஷ்ரேயாஸ் ஐயர் ICU-வில் அனுமதி- தீவிர சிகிச்சை
- அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
- இதனால் ஷ்ரேயஸ் ஐயருக்கு வயிற்றில் அடிபட்டது.
சிட்னி:
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் ஷ்ரேயஸ் ஐயருக்கு வயிற்றில் அடிபட்டது. இதனை தொடர்ந்து வலிதாங்க முடியாமல் அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேட்ச் பிடித்த போது அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. உடலுக்குள் ரத்த கசிவு இருப்பதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story






