என் மலர்
விளையாட்டு
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை.
- ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சையும் சேர்த்து ரோகித் 91 ரன்கள் மற்றும் கோலி 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர்.
இந்நிலையில், ஒழுங்காக விளையாடவில்லை எனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய கர்சான் காவ்ரி, "இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள். குறிப்பாக ரோஹித் மற்றும் விராட் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். உங்கள் சொந்த மண்ணில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முதலில், நீங்கள் பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தீர்கள். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களைச் செய்தீர்கள், ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த போட்டியில் தோல்வியடைந்தீர்கள்.
ஒரு டெஸ்ட் போட்டியில் போட்டியிடுவதற்கு 350 அல்லது 400க்கு மேல் ஸ்கோர்களை எடுக்க வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நமது பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் சிரமப்படும்போது, வெளிநாடுகளில் என்ன செய்வார்கள்? உண்மையிலேயே ஏமாற்றம்தான். ஆஸ்திரேலியாவில் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சரியாக விளையாடவில்லை எனில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.
அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவை. எதிர்காலத்திற்காக நாம் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். செயல்படாத வீரர்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?
அவர்கள் சிறப்பாக விளையாடினால், அவர்களை அணியில் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சரியாக விளையாடாத வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள் எனில் புஜாரா அல்லது ரஹானேவைக் கொண்டு வாருங்கள். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?
ஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில், அதிக நேரம் களத்தில் நின்று பெரிய ஸ்கோர் முடிக்கக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் நமக்கு தேவை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க பெரிய ஸ்கோரை நீங்கள் அடிக்க வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
- வீரர்களை தக்கவைத்து பின்பு அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடி ஏல தொகை உள்ளது.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 என வீரர்களை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதம் எத்தனை கோடி உள்ளது என்ற தகவலை பார்க்கலாம். அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது. சென்னையிடம் ரூ.55 கோடி, மும்பையிடம் ரூ.45 கோடி, லக்னோவிடம் ரூ.69 கோடி, ஐதராபாத்திடம் ரூ.45 கோடி, குஜராத்திடம் ரூ.69 கோடி, கொல்கத்தாவிடம் ரூ.51 கோடி, பெங்களூருவிடம் ரூ.83 கோடி, டெல்லியிடம் ரூ.73 கோடியும் உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில் களத்திற்குள் வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி 32 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை விடுவித்தது.
- ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என பட்லர் கூறினார்.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி மட்டும் 6 வீரர்களை தக்க வைத்தது.
அந்த வகையில் 1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி). ஆகியோரை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என தன்னை விடுத்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்துக்கொண்டதற்கு நன்றி.
- ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.
- கம்மின்ஸ் பந்து வீச்சில் கம்ரான் குலாம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக்-சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 1 ரன்னிலும் ஷபீக் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பாபர் அசாம் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கம்ரான் குலாம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கம்ரான் தான் சந்தித்த 2-வது பந்தை பவுண்டரியாக மாற்றி நம்பிக்கையுடன் இருந்தார். முதல் 4 பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட அவர் 5-வது பந்தை சந்தித்த பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்டைலில் பேட்டை தூக்கி காட்டி வெய்ட் ஆன் என கூறினார்.
அவருக்கு பந்து வீசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இதனை சிரித்தப்படி சென்றார். அடுத்த பந்தை பவுன்சராக வீசினார். அதை எதிர்கொண்ட கம்ரான் திணறியப்படி கேட்ச் கொடுத்து வெளியேறினார். சக வீரரை கிண்டல் செய்த கம்ரானை அடுத்த பந்திலேயே வீழ்த்தி பேட் கம்மின்ஸ் அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
- இலங்கை 3-வது இடத்திலும் நியூசிலாந்து 4-வது இடத்திலும் உள்ளது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
இலங்கை 3-வது இடத்திலும், இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.
- தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு புல்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், 2-வது போட்டியில் 35-30 என்ற கணக்கில் புனேயையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 40-42 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவிடம் தோற்றது. 4-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுடன் 30-30 என்ற கணக்கில் டை செய்தது. 5-வது ஆட்டத்தில் 44-25 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை தோற்கடித்தது.
தமிழ் தலைவாஸ் 6-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்சை இன்று இரவு 9 மணிக்கு எதிர் கொள்கிறது. பெங்களூரு வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர் (44 புள்ளி) சச்சின் (30 புள்ளி), நிதேஷ் குமார் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பெங்களூரு புல்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் புனேரி பல்தான்-குஜராத் அணிகள் மோதுகின்றன.
புனே அணி 4 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 24 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 5-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
- வீரர்கள் தேர்வு விஷயத்தில் அவருக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கொடுக்காத இந்த முன்னுரிமை காம்பீருக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் காம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் காம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும்.
இதற்கிடையே காம்பீரின் அதிகாரத்தை பறிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது. வீரர்கள் தேர்வு விஷயத்தில் அவருக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கொடுக்காத இந்த முன்னுரிமை காம்பீருக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
நியூசிலாந்து தொடரில் ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவரது முடிவு ஏமாற்றத்தை அளித்தது. மும்பை டெஸ்டில் முகமது சிராஜ், சர்பராஸ் கான் ஆகியோரை பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
கிரிக்கெட் வாரிய விதிப்படி தேர்வு விஷயங்களில் பயிற்சியாளர் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முக்கியமானது என்பதால் தேர்வு குழு கூட்டத்தில் அவரை பங்கேற்க கிரிக்கெட் வாரியம் அனுமதித்து இருந்தது.
நியூசிலாந்திடம் ஏற்பட்ட மோசமான தோல்வியால் வீரர்கள் தேர்வு விஷயத்தில் தலையிடும் காம்பீரின் அதிகாரம் பறிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோல கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவு நிர்ணயிக்கப்படும்.
- விரித்திமான் சஹாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது.
- இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
கொல்கத்தா:
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் விருத்திமான் சஹா. அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது. அவர் மாநில அளவிலான உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்த நிலையில் 2024 - 25 ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக ஆடி வரும் விரித்திமான் சஹா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என அறிவித்து இருக்கிறார்.
விரித்திமான் சஹாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 2010 முதல் 2014 வரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்து விக்கெட் கீப்பராக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. அவர் பேட்ஸ்மேன் ஆக அதிக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாஹா தனது கடைசி டெஸ்ட் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2021 இல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார்.
ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி டிராபி சீசனே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக ஆட இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சீசனை எப்போதும் மனதில் வைத்து இருப்பேன்." என்று பதிவிட்டிருந்தார்.
- நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும்.
- இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசஅணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வொயிட்-வாஷ் செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளளது. மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் வொயிட்-வாஷ் ஆவதும் இதுவே முதல் முறை. இதனால் அணியில் உள்ள சில சீனியர் வீரர்களுக்கு பிசிசிஐ செக் வைத்துள்ளது.
நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் ரன்கள் அடிக்காதது பெரும் ஏமாற்றத்தை தந்தது.
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், சீனியர் வீரர்கள் அணியிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
"நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும். பார்டர் கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் மாற்றம் செய்ய முடியாது. ஆஸ்திரேலியா தொடர் சில வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றது.
உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால் ரோகித், விராட், அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு சூப்பர் சீனியர்களும் இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவு தான் அவர்களின் எதிர்காலம். ஒருவேளை மும்பை டெஸ்ட் தான் அந்த நான்கு பேரின் கடைசி சொந்த டெஸ்டில் ஒன்றாக இருக்கலாம்" என்று மேலும் கூறினார்.
சீனியர் வீரர்களால் வாய்ப்புக்காக காத்திருக்கும் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் தனது இடத்தை டெஸ்ட் அணியில் தக்க வைத்துள்ளார். ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல் ரெடியாக உள்ளார். ரோஹித் சர்மாவிற்கு பதில் அபிமன்யு ஈஸ்வரனும், விராட் கோலிக்கு பதில் ருதுராஜ் கைகுவாட்வும் உள்ளனர்.
ரோகித், கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அஸ்வின் தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
- நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பியது, தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சொந்த மண்ணிலேயே 0-3 என தோற்றதை ஏற்றுக் கொள்வது சற்று கடினம்தான். ஆனால் தோல்விக்கு காரணம் என்ன என சுயபரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். போதிய பயிற்சி இல்லையா? அல்லது நன்றாக விளையாடவில்லையா? என தெரிந்துகொள்ள வேண்டும்.
முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் நன்றாக விளையாடினார். ரிஷப் பண்ட் 2 இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடினார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.






