என் மலர்
விளையாட்டு
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆடின. யாருக்கு வெற்றி என்பதில் கடும் போட்டி நிலவியது.
இறுதியில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
நாளை மறுதினம் நடைபெற போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோகோ காப் மற்றும் ஜெசிகா பெகுலாவுடன் மோத உள்ளார்.
- முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெற உள்ளது.
- முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத் தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
முகமது ரிஸ்வான் கேப்டனாகவும், சல்மான் அலி ஆகா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:
அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சல்மான் அலி ஆகா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன்.
- தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
- விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பியது, தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களை அடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களை அடித்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் எலினா ரிபாகினா 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பவுலினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
முன்னதாக, போட்டி தொடங்கும் முன் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் டாஸ் போட்டு ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மார் கடந்த ஒரு ஆண்டாக போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்றது.
- நியூசிலாந்து 3 போட்டிகளிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.
மும்பை:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 3-வது நாள் முடிவதற்குள் இந்தப் போட்டியில் நியூசிலாந்து 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆட்டநாயகன் விருது அஜாஸ் படேலுக்கும், தொடர் நாயகன் விருது வில் யங்குக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை நியூசிலாந்து படைத்தது.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் மாளவிகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.
இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்ர்பர்ட் இறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், ரஷிய வீரர் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் ஹம்பர்ட் 6- 7 (6-8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹம்ப்ர்ட், ஸ்வரேவுடன் மோதுகிறார்.
- இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது சாதாரண விஷயமல்ல. இந்தத் தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம்.
இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. அதேபோல் நியூசிலாந்து அணி எங்களை விடவும் மிக சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
தொடர்ச்சியாக நிறைய தவறுகளை செய்தோம். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் 28 ரன்கள் முன்னிலை பெற்றோம்.
அதேபோல் 2வது இன்னிங்சிலும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதாக சேஸ் செய்யப்படக் கூடியதுதான். ஆனால் ஒரு அணியாகவே நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது, விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.
அதுதான் எங்களின் மனநிலையாக இருந்தது. ஆனால் அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் எனக்காக ஒரு திட்டம் வகுத்து விளையாடினேன். அதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை.
இந்த பிட்சில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவித்து வருகிறோம்.
இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
சீனியர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் ஒவ்வொரு மைதானத்தில் விளையாடுகிறோம்.
இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் முயற்சித்த எந்த விஷயமும் கைகூடவில்லை. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என தெரிவித்தார்.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என கைப்பற்றியது.
- இதனால் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
- அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மும்பை:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஷ்வாலும் களம் இறங்கினார்கள்.
ரோகித் சர்மா 11 ரன்னில் ஹென்றி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 121 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியை வென்ற நியூசிலாந்து 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கபில்தேவ், இர்பான் பதானை முந்தி 4-வது இடத்தை பிடித்தார்.
- கும்ப்ளே, அஸ்வின் தலா 8 முறை 10 விக்கெட்டை எடுத்துள்ளார்கள்.
மும்பை டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 10 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிசில் 65 ரன் கொடுத்து 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 55 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார். 120 ரன் கொடுத்து மொத்தம் 10 விக்கெட் எடுத்தார்.
ஜடேஜா 3-வது முறையாக (77-வது போட்டி) டெஸ்டில் 10 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் கபில்தேவ், இர்பான் பதானை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். கும்ப்ளே, அஸ்வின் தலா 8 தடவையும், ஹர்பஜன்சிங 5 முறையும் 10 விக்கெட்டை எடுத்துள்ளார். அவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா உள்ளார்.






