என் மலர்
விளையாட்டு
- கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது.
- அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர், ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
புதுடெல்லி:
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை வெளியிட்டு இருந்தன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோஷின்கான் (ரூ. 4 கோடி), பதோனி (ரூ.4 கோடி) ஆகிய 5 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.
அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்போது இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதோடு 2025 சீசனில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 'ராகுல் லக்னோ அணியின் அங்கம்' என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தின் போது கே.எல். ராகுலை மீண்டும் எடுக்க லக்னோ அணி திட்டமிட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நிக்கோலஸ் பூரன் உலகின் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் ஆவார். அவரை விடுவித்து ஏலத்தில் எடுப்பதற்காக காத்திருக்க முடியாது. எங்களிடம் ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு வீரரை எடுப்பதற்கு உரிமையாளரை ஆர்.டி.எம். கார்டு இருக்கிறது.
மேலும் முடிந்த வரை எங்கள் அணியில் விளையாடிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து அம்சங்கள் குறித்து நானும், அணி உரிமையாளரும் மீண்டும், மீண்டும் ஆலோசித்து வருகிறோம். வீரர்கள் தக்க வைப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.
இவ்வாறு லாங்கர் கூறியுள்ளார்.
லக்னோ அணி நிர்வாகம் தக்கவைப்பு மூலம் ரூ.51 கோடியை செலவழித்துள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் செலவிட அந்த அணியின் கைவசம் ரூ.69 கோடி இருக்கிறது.
லக்னோ அணி 2024 சீசனில் 7-வது இடத்தை பிடித்தது. ராகுல் தான் அந்த அணியில் அதிகபட்சமாக 520 ரன் குவித்தார். அவரது ஸ்டிரைக்ரேட் 136 ஆக இருந்தது. முதல் வீரராக தக்க வைக்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 499 ரன் எடுத்தார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 178 என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
- 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது.
கேப்டன் ஷாய் ஹோப் 17-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 117 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) (8 பவுண்டரி, 4 சிக்சர்), ரூதர்போர்டு 54 ரன்னும் எடுத்தனர். டர்னர், ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து 9 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 15 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 329 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. அந்த அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி முதல் சதத்தை அடித்தார். அவர் 85 பந்தில் 124 ரன்னும் (5 பவுண்டரி, 9 சிக்சர்), பில் சால்ட் 59 ரன்னும் (8 பவுண்டரி), ஜேக்கப் பெதல் 55 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மேத்யூ போர்டேக்கு 3 விக்கெட் கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
தற்போது 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 6-ந் தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.
- சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
- ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
மும்பை:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஷ்வாலும் களம் இறங்கினார்கள்.
ரோகித் சர்மா 11 ரன்னில் ஹென்றி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்நிலையில் ரிஷப்பண்ட்டுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தையும் ஜடேஜா தடுமாற்றத்துடனும் விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுடன் விளையாடி வருகிறது.
- நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது.
- இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில், ரிஷப் பண்ட்டின் அரை சதத்தால் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
28 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரிலேயே டாம் லாதம் (1 ரன்) ஆகாஷ் தீப் பந்து வீச்சில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே 22 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல், வில் யங்குடன் கைகோர்த்தார். முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய டேரில் மிட்செல் (21 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த டாம் பிளன்டெல் (4 ரன்), கிளென் பிலிப்ஸ் (26 ரன்), சோதி (8 ரன்) வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். தாக்குப்பிடித்து நின்று 9-வது அரைசதம் அடித்த வில் யங் 51 ரன்னில் (100 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேட் ஹென்றி 10 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 43.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. அஜாஸ் பட்டேல் 7 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அஜாஸ் படேல் 8 ரன்னில் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 147 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
- இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் சிமோன் லிரிகாவை வீழ்த்தினார்.
- ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் குண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பப்ளோ:
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி அமெரிக்காவில் உள்ள பப்ளோ நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் சிமோன் லிரிகாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
மேலும் இந்திய வீராங்கனைகள் சன்சல் சவுத்ரி (48 கிலோ), அஞ்சலி குமாரி சிங் (57 கிலோ), வினி ( 60 கிலோ), அகன்ஷ் பலாஸ்வால் (70 கிலோ) ஆகியோர் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டனர்.
ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் குண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
- பாட்னா அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது.
- அதிகபட்சமாக பாட்னா அணியில் தேவாங்க் 11 புள்ளிகள் திரட்டினார்.
ஐதராபாத்:
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து 3-வது வெற்றியை சுவைத்தது.
அதிகபட்சமாக பாட்னா அணியில் தேவாங்க் 11 புள்ளிகள் திரட்டினார். உ.பி. அணி தரப்பில் ககன் கவுடா 9 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 38-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- பாட்னா அணி இன்று 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதின.
இரு அணிகளும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடின.
இறுதியில், பாட்னா அணி, யுபி யோதா அணியை 42-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பிரான்சின் கிறிஸ்டோ பாபோவ் உடன் மோதினர்.
இதில்ஆயுஷ் ஷெட்டி 17-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
- சுப்மன் கில், ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தனர்.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் அடித்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் 90 ரன்னும், ரிஷப் பண்ட் 60 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். வில் யங் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சால் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் வில் யங் 71 ரன்னும், டேரில் மிட்செல் 82 ரன்னும் அடித்தனர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், ரோகித் சர்மா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 84 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
5-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். கில் 31 ரன்னுடனும், ரஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கில் நிதானமாக விளையாட ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 66 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருக்கும்போது உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது சுப்மன் கில் 70 ரன்னுடனும், ஜடேஜா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா மேலும் 4 ரன்கள் அடித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்பராஸ் கான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
8-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. சுப்மன் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்தியா 227 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் அடித்த வண்ணம் இருந்தார். அடுத்து வந்த அஸ்வின் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். கடைசி விக்கெட்டாக ஆகாஷ் தீப் களம் இறங்கினார். இந்தியா 250 ரன்களை கடந்தது.
263 ரன்கள் எடுத்திருக்கும்போது 2 ரன்கள் எடுக்க ஓடியபோது ஆகாஷ் திப் ரன்அவுட் ஆனார். இதனால் இந்தியா 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது வாஷிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.






