என் மலர்
விளையாட்டு
- ஷ்ரேயாஸ் அய்யர் ஏலத்தில் தனது விலையை பரிசோதிக்க விரும்பினார்.
- இனிமேல் ரசிகர்கள் எங்களை விமர்சிக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஷ்ரேயாஸ் அய்யர். இவரது தலைமையில் கொல்கத்தா அணி 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.
2025-ம் ஆண்டு மெகா ஏலத்திற்கான கொல்கத்தா அணியின் வீரர்கள் தக்க வைத்துக்கொள்ளும் பட்டியலில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை. கோப்பையை வென்று கொடுத்தவரை வெளியேற்றலாமா? என கொல்கத்தா அணியை மீது கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை ஏலத்தில் எடுக்காததற்கான உண்மையான காரணத்தை அந்த அணியின் சி.இ.ஓ. வெங்கி மைசூர் விவரித்துள்ளார்.
இது தொடர்பாக வெங்கி மைசூர்
எங்களுடைய தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் பட்டியலில் ஷ்ரேயாஸ் அய்யர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவர்தான் கேப்டன். அவரை சுற்றின் எல்லாம் கட்டமைக்கப்படும். 2022-ல் அதற்காகத்தான் அவரை நாங்கள் ஏலத்தில் எடுத்தோம்.
தற்போது அவர் தக்கவைத்துக் கொள்ளும் பட்டியலில் இல்லாததற்கு அவரே காரணம். கொல்கத்தா அணி அல்ல. ஏலத்தில் அவருடைய மார்க்கெட் விலை என்ன? என்பதை பரிசோதிக்க விரும்பினார். இதுதான் அவர் பட்டியலில் இருந்து வெளியேற காரணமாக இருந்தது.
இனிமேல் ரசிகர்கள் ஷ்ரேயாஸ் அய்யருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவரை முதல் நபராக தக்கவைத்துக் கொள்ள விரும்பினோம். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு தக்கவைப்புக்கு அடிப்படையான விஷயம் என்னவென்றால், அது பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் விஷயம். இது ஒருதலைப்பட்சமான உரிமை அல்ல. வீரர் மற்றும் அணி பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும்.
எங்காவது, அந்த ஒப்பந்தம் பாதிக்கப்படுகிறது என்றால் அது பணம் அல்லது தங்களது மதிப்பை டெஸ்ட் செய்ய விரும்புகிறார்கள் என்பதால்தான். இது முடிவை பாதிக்கிறது. இந்த விஷயத்தில், இது சிறந்தது என்று அவர் உணர்ந்தார், மேலும் ஏலத்திற்குச் சென்று அவர்களின் மதிப்பைச் சோதிக்கும் போது நாங்கள் எப்போதும் வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
இவ்வாறு வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் 103 ரன்கள் விளாசினார்.
இந்தியா 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த டெஸ்ட் ஐந்து நாட்கள் கொண்டதாகும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 'ஏ' அணி 107 ரன்னில் சுருண்டது. தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 21 ரன்களும், நவ்தீப் சைனி 24 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 195 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பிரசித் 3 விக்கெட்டும், நிதிஷ் ரெட்டி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 12 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று விளையாட 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா மேலும் விக்கெட்டை இழக்கவில்லை. சாய் சுதர்சன் 96 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசினார். சதம் அடித்த அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். 200 பந்தில் 9 பவுண்டரியுடன் 103 ரன்கள் அடித்தார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 88 ரன்னில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது.
இந்தியா 91 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. 199 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மாளவிகா அரையிறுதிக்கு முன்னேறினர்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்தின் கல்லே கோல்ஜோனென் மோதினர்.
இதில்ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி மொத்தம் 41 நிமிடம் நீடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் துய் லின் குயென் மோதினர்.
இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.
கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 3 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை 6-7 (1-7), 6-4, 6-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடக்கும் காலிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வரேவ் உடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 65.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ரோகித் சர்மா 18 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்களைக் கடந்த நிலையில் ஜெய்ஸ்வால் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய முகமது சிராஜ் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால் இந்திய அணி திணறி வருகிறது.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன் கில் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்திய அணியின் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 65.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் எடுத்தனர்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த வில் யங், டேரில் மிட்செல் ஜோடி 87 ரன்கள் சேர்த்தது.
இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- நியூசிலாந்து தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மாவின் 311 விக்கெட் சாதனையை முறியடித்துள்ளார். டாப் 5 பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் கும்ப்ளே (619), அஸ்வின் (533), கபில் தேவ் (414), ஹர்பஜன் (417) என முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 2 வீரரும் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் ஹம்பர்ட் 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
- இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் மோதுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்திய அணி தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் வலை பயிற்சியை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடி உள்ளது.
- குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடி உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை நேற்று வெளியிட்டது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 என வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதம் எத்தனை கோடி உள்ளது என்ற தகவலை பார்க்கலாம். அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது.
2025 ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகையின் விவரம்:-
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.55 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ.45 கோடி
லக்னோ - ரூ.69 கோடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.69 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.110.5 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.51 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.41 கோடி
ஆர்சிபி - ரூ.83 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.73 கோடி
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எவின் லூயிஸ் 96 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் இங்கிலாந்து அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் லிவிங்ஸ்டன் 48 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மோட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஓவர் குறைக்கப்பட்டது. 35 ஓவரில் 157 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது.
தொடர்ந்து விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி 25.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.






