என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வில்யங் 38 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
    • இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தார் 2 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மும்பை:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேடிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் இடம் பெற்றார். நியூசிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டது.

    2-வது டெஸ்ட் போட்டியில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அதேபோல் வேகப்பந்து வீச்சார் டிம் சவுத்தியும் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக மேட் ஹென்றி, சோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம்லாதம், கான்வே களம் இறங்கினார்கள். ஆகாஷ்தீப் பந்தில் கான்வே 4 ரன்னில் ட.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வில்யங் களம் வந்தார்.

    இதனையடுத்து விக்கெட் விழாததால் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கேப்டன் ரோகித் பந்து வீச அழைத்தார். அடுத்த சிறிது நேரத்தில் சுந்தர் பந்து வீச்சில் லாதம் (24 ரன்) போல்ட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா வந்த வேகத்தில் சுந்தர் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

    இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தார் 2 விக்கெட்டும் ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    • வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்டில் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார்.
    • ரோகித் சர்மா 64 டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா 76 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி பும்ரா இல்லாமல் களமிறங்கி உள்ளது.

    இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்டில் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார். தனது 64-வது டெஸ்டில் விளையாடும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வான்கடே மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார். 2013-ல் இருந்து தொடர்ந்து விளையாடும் அவர் மும்பையில் ஒரு டெஸ்டில் கூட விளையாடவில்லை.

    இதேபோல சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இது 2-வது டெஸ்ட் போட்டியாகும். ரோகித்துக்கு 11 மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி, அவரை விட 13 டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடிய போதிலும் மும்பையில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    2013-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டிலும் 2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. ரோகித் சர்மா 64 டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா 76 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

    • 5 பேரை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.
    • 2 வருடமாக சிஎஸ்கே அணிக்காக கான்வே விளையாடி உள்ளார்.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் கான்வே விடுவிக்கப்பட்டார். 2 வருடம் ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த விசுவாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கான்வே ஏலத்தில் வரும் பட்சத்தில் இவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டேவான் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றி விட்டது.
    • இந்திய அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

    இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக சிராஜ் இடம் பெற்றுள்ளார். 

    • முதலில் நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் மற்றும் தபாங் டெல்லி மோதின.
    • இதில் பாட்னா பைரட்ஸ் 44-30 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

    ஐதராபாத்,

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் 44-30 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 39-37 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • நாங்கள் இலங்கையில் தோல்வியை சந்தித்ததால் அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டார்கள்.
    • இந்தியா இந்த தோல்வியால் வலியை சந்தித்திருக்கும்.

    நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து வென்றது. வரலாற்றிலேயே இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

    அத்துடன் 12 வருடங்களாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவின் உலக சாதனை வெற்றி நடையையும் நியூசிலாந்து முடித்துள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா நியூசிலாந்தையும் சேர்த்து 5 - 0 (5) என்ற கணக்கில் வெல்லும் என்று இந்திய ஊடகங்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டதாக நியூசிலாந்து வீரர் டாம் பிளண்டல் கூறியுள்ளார். மேலும் கடைசிப் போட்டியிலும் வென்று 3 -0 (3) என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    எங்களை விமர்சித்தவர்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு நாங்கள் முதலில் வந்த போது அவர்களுடைய தொலைக்காட்சியில் 5 -0 என்ற கணக்கில் வெல்வோம் என வாசகங்கள் காணப்பட்டன. நாங்கள் இலங்கையில் தோல்வியை சந்தித்ததால் அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று சொல்வேன்.

    ஆனால் இப்போது நாங்கள் சாதித்துள்ளதை பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். உலகின் ஒரு சிறந்த அணியான இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வீழ்த்தியுள்ளோம். அதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

    .அது எங்களுக்கு சவாலானது. இந்தியா இந்த தோல்வியால் வலியை சந்தித்திருக்கும். ஆனால் நாங்கள் சிரிப்புடன் எங்கள் வீட்டுக்கு திரும்பி செல்வோம். இது என்னுடைய கேரியரில் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். அடுத்ததாக அவர்களை நாங்கள் 3 -0 என்ற கணக்கில் தோற்கடிக்க சுவாரசியமாக இருக்கிறோம். அதையும் தாண்டி நாங்கள் ஏற்கனவே சாதித்துள்ளோம்.

    என்று டாம் பிளண்டல் கூறினார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரவில்லை.
    • தொடர்ந்து தயாராகி நாட்டுக்காக சிறந்த முறையில் விளையாட நாங்கள் முயற்சிக்க உள்ளோம்.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும் காரணம் என்று சொல்ல விரும்பவில்லை என தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். அத்துடன் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்பதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது பற்றி பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது:-

    அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் மட்டும் எங்களை கீழே விட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இந்த தோல்வி வலிக்கிறது என்று சொல்லி நான் மூடி மறைக்க விரும்பவில்லை. இது எங்களுக்கு வலிக்க வேண்டும். அந்த வலிதான் எங்களை இன்னும் சிறந்தவர்களாக மாற்றும்.

    இந்த இடத்தில் இருப்பதில் என்ன தவறு?. இது எங்களுடைய இளம் வீரர்களை இன்னும் சிறப்பாக முன்னேறுவதற்கு தள்ளும். கான்பூரில் வங்காளதேசத்துக்கு எதிராக அற்புதமான வெற்றியை பெற்ற எங்களுக்கு இது போன்ற தோல்வியும் கிடைக்கலாம். நாங்கள் அதிலிருந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரவில்லை. முதலில் இலங்கையிடம் தோற்ற நாங்கள் தற்போது நியூசிலாந்திடம் தோற்றுள்ளோம். ஆனால் தொடர்ந்து தயாராகி நாட்டுக்காக சிறந்த முறையில் விளையாட நாங்கள் முயற்சிக்க உள்ளோம்.

    டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகையால் இப்போதெல்லாம் டிராவை நம்மால் அதிகம் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.எஸ். டோனியை 4 கோடி ரூபாய்க்கு Ucapped Player ஆக தக்கவைத்துள்ளது.
    • ஜடேஜாவை அதிக தொகைக்கு தக்கவைத்துள்ளது.

    ஐ.பி.எல். 2025 சீசனுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைக்கும் வீரர்கள் பெயரை அறிவித்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

    அதன்படி இன்று மாலை 5.30 மணிக்குள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவித்தது.

    அதன்படி ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே, பதிரனா, ஜடேஜா, எம்.எஸ். டோனி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    யாரெல்லாம் தக்கவைத்துள்ளோம் என்ற விவரத்தை அனிருத்தின் மாஸ் ஆன இசையில் வெளியிட்டு சூப்பர் பேன்ஸ், இங்கே உங்களுடைய தீபாவளி பரிசு என சி.எஸ்.கே. வீடியோ வெளியிட்டுள்ளது.

    • பஞ்சாப் அணி இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது.
    • அதிகபட்சமாக கிளாசனை ஐதராபாத் 23 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை இன்று மாலை 5.30 மணிக்குள் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    1. ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 18 கோடி), 2. பதிரனா (ரூ. 13 கோடி), 3. ஷிவம் டுபே (ரூ. 12 கோடி), 4. ஜடேஜா (ரூ. 18 கோடி), 5. எம்.எஸ். டோனி (ரூ. 4 கோடி).

    மும்பை இந்தியன்ஸ்

    1. ஹர்திக் பாண்ட்யா (ரூ. 16.35 கோடி), 2. ரோகித் சர்மா (ரூ. 16.30 கோடி), 3. பும்ரா (ரூ. 18 கோடி), 4. சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி), 5. திலக் வர்மா (ரூ. 8 கோடி)

    லக்னோ

    1. பூரன் (ரூ. 21 கோடி), 2. ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி), 3. மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோசின் கான் (ரூ. 4 கோடி) 5. ஆயுஷ் படோனி (4 கோடி).

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    1. பேட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), 2. அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), 3. நிதிஷ் ரெட்டி (ரூ. 6 கோடி), 4. கிளாசன் (ரூ. 23 கோடி), 5. டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி).

    குஜராத் டைட்டன்ஸ்

    1. ரஷித் கான் (ரூ. 18 கோடி), 2. சுப்மன் கில் (ரூ. 16.5 கோடி), 3. சாய் சுதர்சன் (ரூ. 8.5 கோடி), 4. ராகுல் டெவாட்டியா (ரூ. 4 கோடி), 5. ஷாருக் கான் (ரூ. 4 கோடி)

    பஞ்சாப் கிங்ஸ்

    1. ஷஷாங்க் சிங் (ரூ. 5.5 கோடி), 2. பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    1. ரிங்கு சிங் (ரூ. 13 கோடி), 2. சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), 3 சுனில் நரைன் (ரூ. 12 கோடி), 4. ரஸல் (ரூ. 12 கோடி), 5. ஹர்சித் ரானா (ரூ. 4 கோடி). 5. ராமன்தீப் சிங் (ரூ. 4 கோடி).

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி).

    ஆர்சிபி

    1. விராட் கோலி (ரூ. 21 கோடி), 2 ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), 3. யாஷ் தயாள் (ரூ. 5 கோடி).

    டெல்லி கேப்பிட்டல்ஸ்

    1. அக்சார் பட்டேல் (ரூ. 16.5 கோடி), 2. குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), 3. ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), 4. அபிஷேக் பொரேல் (ரூ. 4 கோடி).

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    • 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

    வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸட் வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் நடைபெற்றது.

    கடந்த 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டோனி டி ஜோர்ஜி 177 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களும், முல்டர் 105 ரன்களும் விளாச முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 38 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 159 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் பேட்டர்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    159 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனதால் வங்கதேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு தென்ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டது.

    2-வது இன்னிங்சில் மகாராஜ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 143 ரன்னில் சுருண்டது. மகாராஜ் 5 விக்கெட்டும், முத்துசாமி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    • முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
    • மும்பை வான்கடே டெஸ்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் புனேயில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    3-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும். சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தியா விளையாடும். அதேவேளையில் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் ஆக்கிவிட வேண்டும் என நியூசிலாந்து நினைக்கும்.

    இந்த நிலையில் வான்கடே டெஸ்ட் குறித்து டாம் லாதம் கூறியதாவது:-

    இந்தியா மிகவும் தரமான அணி. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அவர்கள் நினைத்தபடி அவர்களுக்கு அமையவில்லை. இருந்தபோதிலும், ஒரேநாள் இரவில் அவர்களை மோசமான அணியாக உருவாக்கிவிடாது. அவர்கள் 1 முதல் 15 பேர் கொண்ட சூப்பர் ஸ்டார்களை பெற்றுள்ளனர். அவர்கள் அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை நாளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். இரண்டு அணிகளுக்கும் மீண்டும் ஒரு புதிய சாவல். சிறந்த போட்டியாக இருக்கப் போகிறது.

    கடந்த இரண்டு வாரங்களாக எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் போட்டியின் முடிவைவிட, வெற்றிக்கான முக்கியமான தருணத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்வோம்.

    இவ்வாறு டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

    • நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

    இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த டெஸ்டின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×