என் மலர்
விளையாட்டு
- 4-வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் களமிறங்க உள்ளார்.
- கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 295 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், அடிலெய்டு வில் பகல்-இரவாக நடை பெற்ற 2-வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 -வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை ( 26- ந் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தொடக்க வீரராக விளையாடி வந்த கேஎல் ராகுல் 3-வது இடத்தில் களமிறங்க உள்ளார். அதேபோல 5-வது இடத்தில் விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.
மேலும் இந்த போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதன்படி 3-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் 4-வது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம்பெறுவார். அதேபோல தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இந்த போட்டியில் களமிறங்க உள்ளார். நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முன்னேற கடைசி 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் ரொனால்டோ வெளியிட்டார்.
- ‘சாண்டாகிளாஸ்’ உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் அவர் சந்தித்தார்.
'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார். குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டார்.
இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
- இந்தியா சார்பில் பங்கேற்று இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றார்.
- விருது வென்றவர்கள் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை.
பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் பங்கேற்று இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றவர் மனு பாக்கர். விளையாட்டு துறையில் சிறந்த வீரர், வீராங்கனைக்கு அளிக்கப்படும் கேல் ரத்னா விருதுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
30 பேர் கொண்ட விருது வென்றவர்கள் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. இது மனு பாக்கர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. தன் மகளுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்படாதது குறித்து பேசிய அவரது தந்தை ராம் கிஷான், இன்னும் என் மகள் என்ன செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
இது குறித்து பேசிய அவர், "விருதுகளுக்காக பிச்சை எடுக்க வேண்டும் எனில், எதற்காக ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்? ஒரு அரசு அதிகாரி முடிவு செய்கிறார், கமிட்டி உறுப்பினர்கள் மௌனம் சாதிக்கின்றனர். எனக்கு எதுவும் புரியவில்லை. இப்படித் தான் நீங்கள் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பீர்களா?," என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் விருது வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தோம், ஆனாலும் எங்களுக்கு கமிட்டியிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை," என்று தெரிவித்தார்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.
- பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் ஜமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
ராவல்பிண்டி:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் சமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பேட்ஸ்மேனான இவர், 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உள்ள நிலையில், இறுதி 4 அணிகளுக்கான வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என அவர் கணித்திருக்கிறார்.
இதன்படி, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புகிறேன் என யூ-டியூப் சேனல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
- காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 82 போட்டிகளில் தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தினார்.
- இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடை கூடுதலாக இருக்கிறது என தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் வினேஷ் போகத். மத்திய அமைச்சருக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் போராட்டம் நடத்திய முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் இவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ஜப்பானின் யூ சுசாகியை எதிர் கொண்டார். இதில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். யூ சுசாகி இந்த போட்டிக்கு முன் 82 சர்வதேச போட்டிகளில் தோல்வியடையாமல் வெற்றி வாகை சூடி வந்தார். அவர் முதன்முறையாக வீழ்த்தினார்.
அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை எதிர்கொண்டார். இதில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதனால் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை உறுதி செய்தார்.
அப்போதுதான் வினேஷ் போகத் வாழ்க்கையில் விதி விளையாடியது. இறுதி போட்டிக்கு முன்னதாக அவரது எடை சரிபார்க்கப்பட்டது. அப்போது 100 கிராமுக்கு சற்று கூடுதலாக எடை அதிகமாக இருந்தது. இரவு முழுவதும் கடுமையான முயற்சி மேற்கொண்டும் எடையை குறைக்க முடியவில்லை. 100 கிராம் எடை அதிகமாக உள்ளது. இதனால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இழந்தார். அத்துடன் இவருக்கு பதக்கம் வழங்கப்படாது என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்தது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரிகள் எவ்வளவு போராடியும் பலன் கிடைக்கவில்லை. விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இறுதியாக பதக்கம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பினார்.
அவரது சொந்த ஊரில் பதக்கம் பெற்ற அளவிற்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. அத்துடன் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
அதற்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என வினேஷ் போகத் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாரிஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரிஸிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.

நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை.
இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 358 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வதோதரா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி110 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 53 ரன்னில் அவுட்டானார். பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் சிறப்பாக ஆடி முதல் சதத்தை பதிவு செய்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். கேம்ப்பெல் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, பிரதிகா ராவல், டிடாஸ் சாது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
- இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் விக்கெட்டுக்கு மந்தனா- பிரதிகா ஜோடி 110 ரன்கள் குவித்தது.
- மந்தனா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.
இந்நிலையில் 16 ஓவரின் போது பிரதிகா அடித்த பந்து லெக் திசையில் சென்றது. முதலில் ஒரு ரன் என்பது போல இந்த ஜோடி பாதியில் வேகமாக ஓடி இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தது. அப்போது பிரதிகா 2-வது ரன் எடுக்க முடியாது என தெரிந்து வேண்டாம் என தெரிந்து மந்தாவை வேண்டாம் என கூறினார். அதை கவனிக்காமல் பாதி வரை மந்தனா ஓடி வந்து விட்டார்.
இதனை பார்த்த பிரதிகா மந்தனா அவுட் ஆக கூடாது என நினைத்து கீப்பர் பக்கம் ஓடினார். ஆனால் மந்தனா கீப்பர் பக்கம் நின்றதால் மந்தனா தான் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதனால் பிரதிகா சோகத்துடன் இருந்தார். அவுட் ஆகி சென்ற மந்தனா மீண்டும் திரும்பி வந்து அவரை சமாதானப்படுத்தி தட்டிக் கொடுத்து சென்றார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் நிறைய ரன் அவுட் ஆன வீரர், வீராங்கனை ஆக்ரோஷமாக சந்தமிட்ட கோபத்துடன் சென்றதை அதிகம் பார்த்த நிலையில் மந்தனா மற்றும் பிரதிகா செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
- இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.
பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இதில் பங்கேற்கின்றனர். இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை விவரம்:-
பிப்ரவரி 19, 2025 2:30 PM கராச்சி பாகிஸ்தான் vs நியூசிலாந்து
பிப்ரவரி 20, 2025 2:30 PM நடுநிலை பங்களாதேஷ் vs இந்தியா
பிப்ரவரி 21, 2025 2:30 PM கராச்சி ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 22, 2025 2:30 PM லாகூர் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
பிப்ரவரி 23, 2025 2:30 PM நடுநிலை (துபாய்/கொழும்பு) பாகிஸ்தான் vs இந்தியா
பிப்ரவரி 24, 2025 2:30 PM ராவல்பிண்டி பங்களாதேஷ் vs நியூசிலாந்து
பிப்ரவரி 25, 2025 2:30 PM ராவல்பிண்டி ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 26, 2025 2:30 PM லாகூர் ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
பிப்ரவரி 27, 2025 2:30 PM ராவல்பிண்டி பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
பிப்ரவரி 28, 2025 2:30 PM லாகூர் ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மார்ச் 1, 2025 2:30 PM கராச்சி தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து
மார்ச் 2, 2025 2:30 PM நியூட்ரல் நியூசிலாந்து vs இந்தியா
மார்ச் 4, 2025 2:30 PM நடுநிலை அரையிறுதி (A1 vs B2)
மார்ச் 5, 2025 2:30 PM நடுநிலை அரையிறுதி (B1 vs A2)
மார்ச் 9, 2025 2:30 PM லாகூர் இறுதிப் போட்டி
- ஹர்லீன் தியோல் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- மந்தனா, பிரதிகா ராவல், ரோட்ரிக்ஸ் ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது.
மந்தனா 53 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு முதல் அரை சதம் ஆகும்.
அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவுர் ஜோடி நிதானமாக விளையாடினர். கவுர் 22 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைபதிவு செய்து அசத்தினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னிலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது.
- அஷ்வின் மிகவும் சீரியஸ் ஆன நபர் என்று நினைக்கிறார்கள்.
- கிரிக்கெட் வரலாறு எப்போதும் மதிப்பு மிகுந்த வீரர்களை தான் நியாபகம் வைத்திருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.
ஓய்வு அறிவித்த நிலையில் சக வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் ரவிச்சந்திரன் அஸ்வினை டேக் செய்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான அஸ்வின் அதற்கு முன்னதாக இளம் வயதில் கிரிக்கெட்டில் தான் சந்தித்த சவால்கள், ருசிகர சம்பவங்கள் குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார்.
இப்புத்தகம் தொடர்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் அஸ்வினை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் பேட்டி எடுத்தார்.
அதில் பேசிய அஸ்வின், "நான் யார் என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் பல முறை நான் விக்கெட் எடுக்கும்போது விராட் கோலி துள்ளி குதித்து கொண்டாடுவார். அதனால் கோலி மிகவும் வேடிக்கையான நபர் என்றும் அஷ்வின் மிகவும் சீரியஸ் ஆன நபர் என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் நீங்கள் ஏன் எப்போதும் சீரியசாக இருக்கிறீர்கள்? என்று ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு எனது பதில் என்னவென்றால், நான் எப்போதும் சீரியஸ் ஆன நபர் கிடையாது. நான் என் நாட்டிற்காக ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல என் கையில் பந்து இருக்கும்போது, என் மனது அதை நோக்கியே சிந்தித்து கொண்டிருக்கும்.
அடிக்கடி, நான் 5 விக்கெட்டுகளை எடுக்கும்போது மைதானத்தில் இருக்கும் எனது மனைவிக்கு நான் இதுவரை பறக்கும் முத்தத்தை கொடுத்ததில்லை. அதனால் நான் நானாக இருப்பதில் இருந்து நிறைய மாற்றம் அடைந்ததாக உணர்ந்தேன். எனவே எனது புத்தகத்தில் அதை வெளியிட விரும்பினேன்.
இப்போது நிறைய பேர் விராட் கோலியை பற்றி பேசுகிறார்கள். ரோகித் சர்மாவை பற்றி பேசுகிறார்கள். நான் வளர்ந்தபோது நிறைய பேர் சச்சினை பற்றி பேசினார்கள். கிரிக்கெட் என்பது அணி சார்ந்த விளையாட்டு ஆனால் வரலாறு எப்போதும் மதிப்பு மிகுந்த வீரர்களை தான் நியாபகம் வைத்திருக்கும். என் வாழ்க்கையில் என் அம்மா அப்பாவிற்கு நான் தான் மதிப்பு மிகுந்த வீரர். அது ரோகித், கோலி அல்ல. ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானதுமானது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான்தான் மதிப்பு மிகுந்த வீரர்" என்று தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி 26-ந் தேதி தொடங்குகிறது.
- 3 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் விராட் கோலி சமீப காலங்களாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட் ஆகியுள்ளார். இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:-
நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார். மேலும் யார் எங்கே பேட் செய்வார்கள் என்பது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.
என ரோகித் கூறினார்.
வலை பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு தான் நலமுடன் உள்ளதாக ரோகித் பதிலளித்தார்.






