என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார்.
    • கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.

    அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.

    இந்த வாக்குவாதம் முடிந்தவுடன் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே கான்ஸ்டாஸ் பவுண்டரி அடித்தார். இதனையடுத்து கோலியின் முகம் வாடியது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • 2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

    2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் முதல் 33 பந்துகளில் அதிக ரன்கள் அடித்த ஓபனர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கான்ஸ்டாஸ் படைத்துள்ளார். பும்ராவின் முதல் 33 பந்துகளில் கான்ஸ்டாஸ் 34 ரன்களை அடித்துள்ளார்.

    • இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
    • முதல் டெஸ்டில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:

    ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, சாம் கோண்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா, டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    புனே:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும், 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவிலும் நடைபெற்றன.

    கடந்த 2 மாதமாக நடந்து வந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன. லீக் ஆட்டங்களின் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களைப் பிடித்த உ.பி. யோதாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், புனேவில் இன்று நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் உ.பி. யோதாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ்-யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    புள்ளிப்பட்டியலில் 7 முதல் 12 இடங்களைப் பிடித்த தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    • பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் பும்ரா 9 விக்கெட் கைப்பற்றினார்.
    • இதனால் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 14 புள்ளிகளை கூடுதலாக பெற்றார்.

    துபாய்:

    இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

    பிரிஸ்பேன் போட்டியில் 9 விக்கெட் கைப்பற்றிய பும்ரா, அதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 14 புள்ளிகளை கூடுதலாக பெற்று 904 புள்ளிகளை எட்டி அசத்தியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா தற்போது முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 904 புள்ளிகளைப் பெற்றார். 900 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதன்மூலம் அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். கடந்த 2016-ல் அஸ்வின் இதை எட்டி இருந்தார்.

    மேலும், ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் 900 புள்ளிகளைக் கடந்த 26-வது வீரராக பும்ரா இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் 856 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவும், 852 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இதுவரை 43 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா 194 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மெல்போர்னில் நாளை தொடங்கும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் சாதனையை அவர் எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் அணியில் இருந்து நீக்கம்.
    • தற்போது பேட்டிங்கை வலுப்படுத்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முல்தானில் நடந்த டெஸ்டில் பாபர் அசாம் நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவருக்கு பதிலாக கம்ரான் கலாம் அணியில் சேர்க்கப்பட்டார். கம்ரான் குலாம் முதல் போட்டியிலேயே சதம் அடித்து பாகிஸ்தான் டெஸ்டனில் தொடர்ந்து இடம் பிடித்தார். இந்த நிலையில் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (100 இன்னிங்ஸ்) 3997 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதம், 26 அரைசதங்கள் அடங்கும். சராசரி 43.9 ஆகும்.

    ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 2-1 எனக் கைப்பற்றியது.

    குர்ராம் ஷேசாத், முகமது அப்பாஸ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

    • மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச் அணிகளை வீழ்த்தி ரியல் மாட்ரிட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    • பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளை வீழ்த்தி டார்ட்மண்ட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் தகுதிச் சுற்றுகள் நடைபெற்று இறுதியாக 32 அணிகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதன்மை சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த 32 அணிகளும், 8 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

    ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெறும். இந்த நான்கு அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணிகளின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதிக் கொள்ள வேண்டும்.

    முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக்அவுட், காலிறுதி, அரையிறுதிகள் போட்டிகளில் எதிரணியுடன் இரண்டு முறை (ஒருமுறை மற்ற அணியின் சொந்த மைதானம், ஒருமுறை தனது சொந்த மைதானம்) மோதும். இந்த இரண்டு போட்டிகளிலும் அதிக கோல் அடித்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மட்டும் ஒரே போட்டியாக நடத்தப்படும்.

    காலிறுதி போட்டிகள்

    காலிறுதி போட்டிகளில் பொருசியா டார்ட்மண்ட் 5-4 என அட்லெடிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு காலிறுதியில் பார்சிலோனாவை பி.எஸ்.ஜி. 6-4 என வீழ்த்தியது. 3-வது காலிறுதியில் பேயர்ன் முனிச் 3-2 என அர்செனலை வீழ்த்தியது. 4-வது காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டியை பெனால்டி சூட்அவுட்டில் 4-3 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட்.

    அரையிறுதி போட்டிகள்

    அரையிறுதியில் டார்ட்மண்ட்- பிஎஸ்ஜி அணிகள், பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டார்ட்மண்ட் அணிக்கு சொந்தமான முதல் போட்டியில் டார்ட்மண்ட் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் பிஎஸ்ஜி-க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 1-0 வெற்றி பெற்றது. இரண்டையும் சேர்த்து பிஎஸ்ஜி-யை 2-0 என டார்ட்மண்ட் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிச் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தது. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது. மொத்தமாக ரியல் மாட்ரிட் 4-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப் போட்டி

    இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டார்ட்மண்ட் அணியை 2-0 என வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் டேனி கார்வாஜல் முதல் கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 15-வது முறையாக ஐரோப்பிய யூனியன் சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது. கடந்த 11 வருடத்தில் மட்டும் 6 முறை வென்றுள்ளது.

    இந்தத் தொடரில் ஹாரி கேன் (பேயர்ன் முனிச்), எம்பாப்வே (பிஎஸ்ஜி) ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 கோல்கள் அடித்த்திருந்தனர்.

    தொடரின் சிறந்த வீரராக வின்சியஸ் ஜூனியர் தேர்வு செய்யப்பட்டார். இளம் வீரராக ஜூட் பெலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இருவரும் ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்தவர்கள்.

    • ஆடுகளம் சற்று புற்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • ஆஃப் ஸ்பின்னர்கள் பந்தை கூடுதலாக திருப்ப முடியும் என நம்புகிறேன்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை காலை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமானது.

    இந்த நிலையில் மெல்போர்ன் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-

    ஆடுகளத்தை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. கடந்த சில வருடங்களாக எப்படி இருந்ததோ, அதோடு ஒத்துப்போகும் வகையில் தோன்றுகிறது. ஆடுகளத்தை சிறிது புற்கள் ஆக்கிரமித்துள்ளது. மிகவும் நல்ல மற்றும் உறுதியான ஆடுகளம் என உணர்கிறேன். இதனால் ஆடுகள பராமறிப்பாளர்கள் சிறப்பாக அமைத்துள்ளனர். கடந்த ஐந்து ஆறு வருடங்களாக எப்படி இருந்ததோ, அதேபோல்தான் இந்த வருடமும் இருக்கலாம்.

    மெல்போர்னில் 39 டிகிரி வெப்ப நிலையில் வீரர்கள் விளையாட வேண்டியிருக்கும். விக்கெட் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சம பேலன்ஸ் உள்ளதாக இருக்கும். நாதன் லயன் இங்கு சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வலது பக்கத்தில் இடது பக்கமாக பந்து சற்று கூடுதலாக திரும்பினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை" என்றார்.

    இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    • கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது
    • இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னம், வங்கி அதிகாரிகளின் கடவுச்சொற்களை (PASSWORD) பயன்படுத்திக் கடந்த 2013-ம் ஆண்டு மோசடி செய்துள்ளார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவும் அதே வங்கியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 2011-ம் ஆண்டு அறிமுகமாகி உள்ளார்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இது விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் கிரிக்கெட்டில் நிறைவேறாத ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு அஸ்வின், பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை. அதுதான் கிரிக்கெட்டில் எனது நிறைவேறாத ஆசை என கூறியுள்ளார்.

    அவர் சொல்லுவது போல அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011-ம் ஆண்டு தான் அறிமுகமாகி உள்ளார். ஆனால் இந்திய அணி 2008-க்குப்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாது எனவும் இரு தரப்பு தொடரில் பங்கேற்பதில்லை எனவும் பிசிசிஐ முடிவெடுத்தது.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினால் பங்கேற்கமுடியவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்வின் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கிறிஸ்துமசை கொண்டாடியுள்ளார்.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

    அதில் தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மேலும் தோனி தாத்தா வேடம் அணிந்து உள்ள புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் Santa Class என பதிவிட்டுள்ளது. தோனி தாத்தா வேடமணிந்து உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இத்தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என கூறப்பட்டுள்ளது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நாளை புலவாயோவில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.

    அதேசமயம் இத்தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

    ×