என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயிற்சியின் போது மாற்றுதிறனாளி சிறுமியை இந்திய வீரர் ரிஷப் பண்ட் சந்தித்தார்.
    • பண்டை சந்தித்த சிறுமி மகிழ்ச்சியாக அவருடன் உரையாடினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியின் போது மாற்றுதிறனாளி சிறுமியை இந்திய வீரர் ரிஷப் பண்ட் சந்தித்தார். பண்டை சந்தித்த சிறுமி மகிழ்ச்சியாக அவருடன் உரையாடினார்.

    அந்த வீடியோவில், ஹாய், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, ரிஷப். நான் மிக நெருக்கமாக சந்தித்த முதல் கிரிக்கெட் வீரர் நீங்கள் என்று அந்த சிறுமி கூறினார்.

    அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என பண்ட் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணியின் கேப்டனாக நிக்கி பிரசாத்தும் துணை கேப்டனாக சானிகா சால்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அணியில் கமலினி ஜி மற்றும் பவிகா அஹிரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.

    ஐசிசியின் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் மலேசியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜனவரி 18-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் கேப்டனாக நிக்கி பிரசாத்தும் துணை கேப்டனாக சானிகா சால்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அணியில் கமலினி ஜி மற்றும் பவிகா அஹிரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர், அதே நேரத்தில் நந்தனா எஸ், ஐரா ஜே மற்றும் அனாதி டி ஆகிய மூன்று காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். 

    • அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • தனுஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் மோதி வருகின்றனர். முதல் 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடைபெற உள்ளது.

    இந்த தொடரின் பாதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

    இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு இளம் வீரரை அணியில் சேர்ந்துள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தனுஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு விசா இல்லை. அவர் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

    இவர்கள் ரெடியாக இருப்பார்களா என்பது கேள்வி குறிதான். ஆனால் தனுஷ் ரெடியாக இருந்தார். அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்த 2 டெஸ்ட் போட்டியிலும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கலாம். இதனால் பேக் அப் வீரராக இவரை அணியின் சேர்த்துள்ளோம்.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளியின் உடல் நிலை குறித்து அவரது நண்பர் மார்கஸ் கௌடோ தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்படி வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார். எனினும், அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    வினோத் காம்ப்ளியின் மருத்துவ செலவுகளை வேறொருவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    "காம்ப்ளி தற்போது நலமாக உள்ளார். அவர் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கச் சொன்னேன். அவருடைய சிகிச்சைக்கு ஒருவர் பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறார். பிறகு ஏன் சிகிச்சை அளிக்காமல் இருக்க வேண்டும்?" என்று மார்கஸ் தெரிவித்தார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது பென் ஸ்டோக்ஸ் காயமடைந்தார்.
    • ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வரியம் அறிவித்தது.

    இதில் பெரிதும் எதிர்பார்ப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவேன் என பென் ஸ்டோக்ஸ் உறுதியளித்திருந்த நிலையில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியது.

    இந்நிலையில் பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யாததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

    அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது காயமடைந்த பென் ஸ்டோக்ஸ், களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    அந்த சோதனையின் முடிவில் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது இடது காலில் ஏற்பட்ட தொடை காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பின் கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் காயத்தை சந்தித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 305 ரன்கள் என்ற இலக்கை எட்டி இலங்கை வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

    ராஜ்கோட்:

    குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் சீனியர் மகளிர் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், அரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.

    இதனால், 390 என்ற வெற்றி இலக்கை நோக்கி வங்காள மகளிர் அணி விளையாடியது. அந்த அணி தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடியது. இதனால், 5 பந்துகள் மீதம் இருந்த சூழலில், 390 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்து வரலாறும் படைத்துள்ளது.

    ஒரு நாள் போட்டியில் இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் கேன்டர்பரிக்கு எதிராக விளையாடிய நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 309 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சாதனையை வங்காள அணி முறியடித்து உள்ளது.

    சர்வதேச அளவில், நடப்பு ஆண்டு தொடக்கத்தில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 305 ரன்கள் என்ற இலக்கை எட்டி இலங்கை வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

    • இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
    • சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது ரசிகர்களில் ஒருவரால் வினோத் காம்ப்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.


    1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.

    உடல் நலம் பதிக்கப்பட்டுள்ள உள்ள வினோத் காம்ப்ளி சமீபத்தில் அங்குள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் காயத்தால் விளையாடாமல் உள்ளார்.
    • காயம் குணமடைந்த நிலையிலும், முழு உடற்தகுதி பெறவில்லை.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸிவ்ங் செய்வதில் வல்லவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் இருந்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார்.

    அறுவை சிகிச்சை முடிந்து காயம் முழுமையாக குணமடைந்த நிலையில் பயிற்சியை தொடங்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேற்கு வங்க அணிக்காக விளையாடினார்.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ஐந்து நாட்கள் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி பெற வேண்டும் என அணி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனால் முதல் மூன்று போட்டிகளில் முகமது ஷமி இடம் பிடிக்கவில்லை. கடைசி இரண்டு போட்டியிலாவது விளையாடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில்தான் பிசிசிஐ அவரது உடற்தகுதி குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது. அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்மாட்டார் எனத் தெரிவித்துள்ளது.

    இந்திய அணியில் இடம் பெறுவதற்காக சையத் முஷ்டாக் அலியின் 9 போட்டிகளிலும் இடம் பிடித்தார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை விளையாட இருந்தார். கடைசி நேரத்தில் களம் இறங்கவில்லை.

    பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்போதுள்ள மருத்துவ மதிப்பீடு அப்படையில், பிசிசிஐ மருத்துவக் குழு, அவருடைய மூட்டு முழு உத்வேகத்தில் பந்து வீச இன்னும் நேரம் எடுத்துக் கொள்ளும் என தீர்மானித்துள்ளது. இதனால் மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான உடற்தகுதியில் உள்ளார் என கருதப்படமாட்டார்.

    டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதற்கான வகையில் அவரது பந்து வீச்சை இன்னும் அதிகரிக்க வேண்டும். விஜய் ஹசாரே போட்டியில் அவர் பந்து வீசுவதை பொறுத்து கணக்கிடப்படும். அதேவேளையில் அறுவை சிகிச்சை காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக பிரபல பாடகர் ராகுல் வைத்யா தெரிவித்தார்.
    • கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக பிரபல பாடகர் ராகுல் வைத்யா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பாடகர் ராகுல் வைத்யா, இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி எதற்காக இன்ஸ்டாகிராமில் என்னை பிளாக் செய்தார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. எப்போதாவது ஏதாவது நடந்ததா என்று கூட எனக்கு தெரியவில்லை.

    ராகுல் வைத்யா பிரபலமான பாடல் போட்டியான இந்தியன் ஐடலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தும் , இந்தி பிக் பாஸ் சீசன் 14 இல் போட்டியாளராக பங்கேற்றும் மக்களிடையே பிரபலமானவர்.

    அவர் 2021 இல் தொலைக்காட்சி நட்சத்திரமான திஷா பர்மரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தற்போது விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

    • ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அவரது பந்தை எதிர்கொள்ள திணறி வருகின்றனர்.
    • பும்ரா 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள திணறி வருகிறார்கள். இந்த நிலையில் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்ட இரண்டு விசயங்கள் முக்கியமானவை என முன்னாள் வீரர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சைமன் காடிச் கூறுகையில் "மிகவும் பாசிட்டிவ் ஆன பேச்சுவார்த்தைகள்தான் அணி வீரர்களுக்கும் இடையில் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவை நல்ல விசயம்தான். இதை அவர்கள் கவனத்தில் வைக்கக் கூடிய ஒன்று.

    ஆனால், பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பவுண்டரிகள் அடிப்பது மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது, ஏனென்றால், அவர் அதிக அளவில் மோசமான பந்துகள் வீசமாட்டார்.

    அதனால் அடிக்கடி ஸ்டரைக் மாறுதல், உறுதியான தடுப்பாட்டம் ஆகியவற்றில் கவனம் வைப்பது அவசியம். 10 ஓவர்களுக்கு மேல் இல்லையென்றால் எந்தவொரு நோக்கத்துடன், உங்களால் விளையாடும் திறனை பெற முடியாது. இது எல்லா வீரர்களுக்கும் சவாலானது" என்றார்.

    பும்ரா 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    • ஆஸ்திரேலியா தொடதில் மெக்ஸ்வீனியை பும்ரா 5 இன்னிங்சில் 4 முறை அவுட்டாக்கியுள்ளார்.
    • இதனால் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் 4-வது போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரரான நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ்.

    இவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கூறும்போது "நான் பும்ராவுக்கு எதிராக திட்டம் வைத்துள்ளேன். ஆனால் அதை தற்போது என்னவென்று சொல்ல மாட்டேன். பந்து வீச்சாளர்களை கடும் நெருக்கடிக்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இரண்டு முறையும் பும்ரா பந்து வீசு்சை சாம் கான்ஸ்டான்ஸ் எதிர்கொள்ளவில்லை.

    இது தொடர்பாக கூறுகையில் "எல்லோரும் ரொம்ப நல்ல பந்து வீச்சாளர்கள். உலகத்தரம் வாய்ந்தவர்கள். அந்த சவாலை அனுபவித்து விளையாட காத்திருக்கிறேன்" என்றார்.

    மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளது. இதில் நான்கு முறை நாதன் மெக்ஸ்வீனியை பும்ரா அவுட்டாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் மனு பாக்கர் இரண்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை.
    • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் இந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிஸ் ஒலிம்பிக் என்ற பெயரில் நடைபெற்றது.

    இந்தியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள்- வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். ஆனால் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 7 பதக்கங்கள் வென்ற நிலையில் இந்த முறை ஒரு பதக்கம் குறைவாகும்.

    தடகளத்தில் நீரஜ் சோப்ரா வெள்ளி

    தடகளத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், இந்த முறை பாகிஸ்தான் வீரரிடம் தங்கத்தை பறிகொடுத்தார்.

    தகுதிச் சுற்றில் குரூப் "பி"-யில் நீரஜ் சோப்ரா 89.34மீ தூரம் ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதே பிரிவில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.59மீ தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். "ஏ" பிரிவில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர் அதிகபட்சமாக 97.86 மீட்டர் வீசினார்.

    இதனால் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது சிறந்த முயற்சியோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா Foul ஆனார். 2-வது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். இதனால் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் பாகிஸ்தான வீரர் நதீம் 2-வது முயற்சியில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 92.97மீ தூரம் எறிந்தார்.

    நீரஜ் சோப்ரா அதன்பின் நான்கு முயற்சிகளிலும் ஏமாற்றம் அடைந்தார். இதனால் நதீம் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரேனடா வீரர் பீட்டர்ஸ் 88.54 மீ எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். வெள்ளி வென்று அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்று சாதனைப் படைத்தார்.

    துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 வெண்கல பதக்கம்: மனு பாக்கர் 2 பதக்கம் வென்று சாதனை

    ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் ஸ்வாப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார். சீன வீரர் தங்க பதக்கமும், உக்ரைன் வீரர் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

    பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் வீராங்கனையான மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சரப்ஜோத் சிங் உடன் கலந்து கொண்டு கொரிய அணியை 16-10 என வீழ்த்தினார்.

    மல்யுத்தம் போட்டியில் வெண்கலம்

    ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் போட்டியில் அமான் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டியை தவறவிட்டார்.

     வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பியூட்ரோ ரிகா வீரரை எதிர்கொண்டார். இதில் அமான் 13-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

    ஹாக்கியில் வெண்கலம்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அரையிறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என தோல்வியடைந்தது.

    இதனால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.

    ×